இந்தியா

முற்றிய வாக்குவாதம்.. தெருவில் குழாயடி சண்டையாக மாறிய பாஜக மகளிரணி கூட்டம் - வீடியோ வைரல் !

உத்தர பிரதேசத்தில் பாஜக மகளிரணி ஆலோசனை கூட்டத்தில், அனைத்து பெண்களும் தலைமுடியை பிடித்து சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முற்றிய வாக்குவாதம்.. தெருவில் குழாயடி சண்டையாக மாறிய பாஜக மகளிரணி கூட்டம் - வீடியோ வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இங்கிருக்கும் ஜலாவூன் என்ற பகுதியில் பாஜக மகளிரணி ஆலோசனை கூட்டம் இன்று காலை (அக் 18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளூரில் உள்ள பாஜகவை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது திடீரென அங்கிருந்த சில பெண்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது தனிப்பட்ட வாதமா அல்லது கட்சியை விமர்சித்தால் வந்த வாதமா என்று தெரியவில்லை. இந்த வாதத்தில் இரு பெண்கள் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஒரு அறையினுள் நடைபெற்ற இந்த வாதம் வாசல் வரை வந்தது.

முற்றிய வாக்குவாதம்.. தெருவில் குழாயடி சண்டையாக மாறிய பாஜக மகளிரணி கூட்டம் - வீடியோ வைரல் !

இருவரும் முடியை பிடித்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டபோது, அவர்களை சிலர் சமாதானப்படுத்த முயற்சிக்கும் நிலையில், பலரும் கூட சேர்ந்து சண்டையிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர், இன்னொரு பெண்ணின் முடியை பிடித்து இழுக்கிறார். மேலும் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.

சில பெண்கள் அந்த பெண்ணுக்கும், சில பெண்கள் இந்த பெண்ணுக்கும் ஆதரவாக இருந்து சண்டையிடுகின்றனர். அதில் ஒரு பெண்ணை 2 பெண்கள் சேர்ந்து முதுகில் குத்துகின்றனர். அவர்களுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரும் அந்த பெண்ணின் முதுகில் சரமாரியாக குத்துகிறார். இந்த சண்டை எதற்காக என்று தெரியவில்லை. எனினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில், "மீண்டும் பாஜகவினர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முடியை இழுத்து சண்டையிடும் போட்டி நடைபெறுகிறது. ஜலாவூனில் நடந்த பாஜக மாநாட்டின் போது, பெண் தொழிலாளர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

மேலும் சண்டை வெடித்தது. பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து தங்கள் ஒழுக்கமின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முதல்வர் முதலில் தனது தலைவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.

தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, "இவர்கள் ஜலாவூன் பாஜகவின் பெண் தொழிலாளர்கள். சக்தி வந்தன் சம்மேளனத்தில் (மகளிர் இடஒத்துக்கீடு மசோதா குறித்த ஆலோசனை கூட்டத்தில்) ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு தங்கள் சக்தியை சோதித்து கொள்க்கின்றனர். பாஜக என்ற கோபம் அவர்கள் மீது இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வெளிப்படையாக தெருக்களில் சலசலப்பை உருவாக்குகிறார்கள்.

சிந்தியுங்கள்! பெண்கள் இருக்கும் கட்சியில் ஆண்கள் எப்படி இருப்பார்கள்? இந்த பாஜக காரர்களிடமிருந்து கடவுள் நம்மைக் காப்பாற்றட்டும்." என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories