வைரல்

“என் குழந்தையை பாத்தியா..” பெண்ணிடம் தனது குட்டியை காட்டிய குரங்கு.. முத்தமிட்டு கொஞ்சும் வீடியோ வைரல் !

குரங்கு ஒன்று தனது குட்டியை, பெண் ஒருவரிடம் காட்டி கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“என் குழந்தையை பாத்தியா..” பெண்ணிடம் தனது குட்டியை காட்டிய குரங்கு.. முத்தமிட்டு கொஞ்சும் வீடியோ வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகளை நாம் சில விலங்குகளிடம் காண முடியும். குறிப்பாக கோபம், பாசம், சோகம் உள்ளிட்ட அனைத்தும் விலங்குகள் நம்மிடமும் வெளிப்படுத்தும். அப்படி கோபப்படும் விலங்குகள் மனிதர்கள் போல் யோசிக்க கூட செய்யாமல், அதன் உரிமையாளரையே தாக்கும். மேலும் அருகில் யார் இருந்தாலும் அது பார்க்காது.

“என் குழந்தையை பாத்தியா..” பெண்ணிடம் தனது குட்டியை காட்டிய குரங்கு.. முத்தமிட்டு கொஞ்சும் வீடியோ வைரல் !

பாசத்தையும் அதே போல் வெளிப்படுத்தும். சிங்கம் முதல் வரிக்குதிரை வரை அனைத்து விலங்குகளும் தாங்கள் யார் மீது அன்பாக இருக்கிறோமோ அவர்களை கொஞ்சும். இது தொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வரும். அதுமட்டுமின்றி எந்த உயிரினங்கள் என்றாலும் அதற்கு பாச உணர்வுகள் இருக்கும்.

அந்த வகையில் தற்போது குரங்கு ஒன்று பெண் ஒருவரிடம் தனது குட்டியை காட்டி கொஞ்சு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கண்ணாடிக்குள் இருக்கும் குரங்கிடம் பெண் ஒருவர் தனது குழந்தையை காட்டுகிறார். அதுவும் அந்த குழந்தையை பார்த்துவிட்டு உடனே ஓடி போய், உள்ளே சென்று தனது குட்டியை கொண்டு வந்து அந்த பெண்ணிடம் காட்டுகிறது. தொடர்ந்து தனது குட்டியை முத்தமிட்டு கொஞ்சுகிறது.

“என் குழந்தையை பாத்தியா..” பெண்ணிடம் தனது குட்டியை காட்டிய குரங்கு.. முத்தமிட்டு கொஞ்சும் வீடியோ வைரல் !

இந்த வீடியோவானது கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் அமைந்திருக்கும் Franklin Park Zoo-விற்கு எமிலியா அகஸ்டின் என்ற பெண் ஒருவர் தனது 5 வயது குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கே அவர் தனது குழந்தையை கொரில்லா விடம் காட்டுகிறார். அதனை கண்ட அந்த கொரில்லாவும் தனது குழந்தையை காட்டுகிறது.

“என் குழந்தையை பாத்தியா..” பெண்ணிடம் தனது குட்டியை காட்டிய குரங்கு.. முத்தமிட்டு கொஞ்சும் வீடியோ வைரல் !
“என் குழந்தையை பாத்தியா..” பெண்ணிடம் தனது குட்டியை காட்டிய குரங்கு.. முத்தமிட்டு கொஞ்சும் வீடியோ வைரல் !

குரங்கு தானும் ஒரு தாய், தன்னிடமும் ஒரு குழந்தை இருக்கிறது என்று பெண் ஒருவரிடம் காட்டுவது தொடர்பான இந்த வீடியோ பாசத்தை வெளிப்டுத்துவதாக கூறி அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

குரங்கு ஒன்று தனது குட்டியை, பெண் ஒருவரிடம் காட்டி கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories