உலகம்

4 குழந்தைகள், 40 நாட்கள்.. விமான விபத்தில் அமேசான் காட்டுக்குள் சிக்கி தவிப்பு: உயிருடன் இருந்தது எப்படி?

விமான விபத்தில் அமேசான் காடுகளில் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 குழந்தைகள், 40 நாட்கள்.. விமான விபத்தில் அமேசான் காட்டுக்குள் சிக்கி தவிப்பு: உயிருடன் இருந்தது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கொலம்பியா நாட்டில் அமைந்துள்ளது அமேசான் காடுகள். இங்கு கடந்த மே மாதம் குட்டி விமானத்தில் பயணம் செய்த குடும்பம் விபத்தில் சிக்கி கொண்டது. அப்போது அதில் இருந்த பைலட், தாய் உட்பட 3 பேர் இறந்துபோகவே, அதில் இருந்த 4 குழந்தைகள் மட்டும் உயிர் தப்பியிருந்தனர். இந்த சூழலில் இந்த விமான விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்துள்ளாரா என்று கொலம்பியா ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

4 குழந்தைகள், 40 நாட்கள்.. விமான விபத்தில் அமேசான் காட்டுக்குள் சிக்கி தவிப்பு: உயிருடன் இருந்தது எப்படி?

தொடர்ந்து பல நாட்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது உயிர் பிழைத்த 4 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களை கண்டதும் ஆச்சர்யத்தில் உறைந்தனர். பின்னர் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் உணவு என கொடுத்து பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அவர்கள் அடர்ந்த பயங்கரமான அமேசான் காடுகளில் உயிருடன் வாழ்ந்தது எப்படி என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

4 குழந்தைகள், 40 நாட்கள்.. விமான விபத்தில் அமேசான் காட்டுக்குள் சிக்கி தவிப்பு: உயிருடன் இருந்தது எப்படி?

பழங்குடி குடும்பத்தில் வளர்ந்த இந்த குழந்தைகள் கடந்த மே 1-ம் தேதி தனது குடும்பத்துடன் தனி குட்டி விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர். அதில் குடும்பத்தை இழந்த இந்த குழந்தைகள் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். இதையடுத்து பசிக்கும்போதெல்லாம் அங்கிருந்த உண்ணக் கூடிய காய், பழம், செடி, தளைகள் என உண்டு வந்துள்ளனர்.

4 குழந்தைகள், 40 நாட்கள்.. விமான விபத்தில் அமேசான் காட்டுக்குள் சிக்கி தவிப்பு: உயிருடன் இருந்தது எப்படி?

மேலும் அந்த குழந்தைகள் சிறுவயதில் இருந்தே காடுகளை அறிந்து வைத்திருந்ததால் அங்கே வாழ அவர்களுக்கு பயணமில்லாமல் இருந்துள்ளது. அதோடு விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யூக்கா என்ற வகை மாவையும் (Yucca flour) உண்டு வந்துள்ளனர். இப்படியே 4 குழந்தைகளும் 40 நாட்களாக காட்டில் உயிர் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அந்த பகுதியிலுள்ள மக்கள் அபூர்வமாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த குழந்தைகளை 'காட்டின் குழந்தைகள்' என்றே மக்கள் அழைக்கின்றனர்.

4 குழந்தைகள், 40 நாட்கள்.. விமான விபத்தில் அமேசான் காட்டுக்குள் சிக்கி தவிப்பு: உயிருடன் இருந்தது எப்படி?

கொலம்பியாவில் பழங்குடி சமூகங்களுக்கும் அந்நாட்டின் ராணுவத்தினருக்கும் சுமூகமான உறவு இல்லாத சூழலிலும் குழந்தைகளை மீட்ட ராணுவத்தினருக்கு, அங்குள்ள காட்டுச் சூழலை விளக்கி விஷம் கொண்ட விலங்குகளிடம் இருந்து தப்பிக்கப் பழங்குடியினர் உதவியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. விமான விபத்தில் அமேசான் காடுகளில் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories