வைரல்

பிஃஎப் பாஸ்புக் சேவை தொடர்ந்து முடக்கம் - சிக்கி தவிக்கும் பயனாளிகள் !

பிஃஎப் பாஸ்புக் சேவை தொடர்ந்து முடக்கம் - சிக்கி தவிக்கும் பயனாளிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பி.ஃஎப் கணக்கில் இந்தியாவில் கோடி கணக்கானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் வட்டி சில சமயங்களில் வழங்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. மேலும் சில நிறுவனங்கள் பி.எப் கணக்கில் பணத்தைச் செலுத்தாமல் விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது.

இதனால் பி.ஃஎப் கணக்கில் வேலை பார்க்கும் நிறுவனங்கள் முறையாக பணத்தை செலுத்துகிறதா உள்ளிட்ட விவகாரங்களை தெரிந்துகொள்ள www.epfindia.gov.in என்ற இணையத்தை அணுகலாம். பலரும் www.epfindia.gov.in தங்களின் கணக்கை சரிபார்த்து வந்தனர்.

மேலும் ஊழியர்கள் தங்களது பி.ஃஎப் கணக்கு இருப்பை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உமாங் ஆப் மூலம் ஒருவர் பி.ஃஎப் பாஸ்புத்தகத்தினையும் பெற முடியும். இதன் மூலம் உங்களது இருப்பினையும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் www.epfindia.gov.in இணையத்தில் பாஸ்புக் பயன்படுத்துவதில் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் பி.ஃஎப் சந்தாதாரர்கள் கடந்த சில நாட்களாக இ-பாஸ்புக் அம்சம் செயலிழந்து இருப்பதை சமாளிக்க வேண்டியுள்ளது.

பி.ஃஎப் தனது இணையதளத்தில் ஜனவரி 17, 2023 அன்று "இ-பாஸ்புக் வசதி மாலை 5 மணி முதல் கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது, ஜனவரி 17, 2023 நிலவரப்படி, EPFO இணையதளத்தில் உள்ள அறிவிப்பு இதுதான்: தொழில்நுட்ப பராமரிப்பு தொடர்பான சிக்கலின் காரணமாக உறுப்பினர் பாஸ்புக் போர்டல் கிடைக்காது. எனத் தெரிவித்துள்ளனர். இதனால் பலரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories