முரசொலி தலையங்கம்

ஆக்ஸ்பாம் அறிக்கை: ஏழைத்தாயின் மகன் ஆட்சியில் யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? - சாட்டை சுழற்றிய முரசொலி!

இந்தியாவில் எத்தகைய பொருளாதாரச் சமத்துவமின்மை இருக்கிறது என்பதை இந்த அறிக்கை தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

ஆக்ஸ்பாம் அறிக்கை: ஏழைத்தாயின் மகன் ஆட்சியில் யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? - சாட்டை சுழற்றிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொருளாதாரச் சமத்துவமின்மை!

‘ஆக்ஸ்பாம்’ அறிக்கையானது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம் மக்கள் தொகையில் அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவீதம் மக்கள் ஒட்டுமொத்தமாகவே வெறும் 3 சதவீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எத்தகைய பொருளாதாரச் சமத்துவமின்மை இருக்கிறது என்பதை இந்த அறிக்கை தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இந்தக் கூட்டத்தில் WEF அமைப்பின் உரிமைக் குழுவான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் ஆண்டின் சமத்துவமின்மை அறிக்கையின் இந்தியா குறித்த தகவல்களை வெளியிட்டது.

ஆக்ஸ்பாம் அறிக்கை: ஏழைத்தாயின் மகன் ஆட்சியில் யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? - சாட்டை சுழற்றிய முரசொலி!

இந்த ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் மீது 5 சதவீத வரி விதிக்கப்பட்டாலே இந்தியாவில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கும் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்கும் 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக 40,423 கோடி ரூபாய் அளவிலான தேவைப்படும் நிதியை திரட்ட முடியும் எனச் ‘சர்வைவல் ஆஃப் தி ரிச்சஸ்ட்’ என்ற அறிக்கையில் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளது ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்.

நாட்டில் உள்ள டாப் 10 கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் மீது ஒரு முறை 5 சதவீத வரி விதிக்கப்பட்டால் 1.37 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும். இது 2022–-23 ஆம் ஆண்டிற்குச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ. 86,200 கோடி) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் (ரூ.3,050 கோடி) மதிப்பிட்டுள்ள நிதி தேவையை விட 1.5 மடங்கு அதிக நிதியை திரட்ட முடியும்.

ஆக்ஸ்பாம் அறிக்கை: ஏழைத்தாயின் மகன் ஆட்சியில் யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? - சாட்டை சுழற்றிய முரசொலி!

இந்தியாவில் ஒரு ஆண் ஊழியர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் பெண் தொழிலாளர்கள் 63 பைசா மட்டுமே சம்பாதிப்பதாக ஆக்ஸ்பாம் அறிக்கை பாலின சமத்துவமின்மை குறித்து தெரிவித்துள்ளது.

பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் களுக்கான ஊதிய வித்தியாசம் இன்னும் அதிகமாக உள்ளது. உயர் சமூகக் குழுக்கள் சம்பாதிக்கும் பணத்தில் பட்டியலிடப்பட்ட சாதியினர் 55 சதவிகிதம் மட்டுமே சம்பாதித்து வருகின்றனர். 2018 மற்றும் 2019க்கு இடையில் நகர்ப்புற தொழிலாளர் வருவாயில் 50 சதவீத பணத்தை மட்டுமே கிராமப்புறத் தொழிலாளர்கள் சம்பாதித்தனர்.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நவம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு நாளுக்கு 3,608 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்பாம் அறிக்கை: ஏழைத்தாயின் மகன் ஆட்சியில் யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? - சாட்டை சுழற்றிய முரசொலி!

இந்தியாவில் 2020ம் ஆண்டு 102 ஆக இருந்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2022ம் ஆண்டு 166 ஆக அதிகரித்திருக்கிறது.

சமத்துவமின்மையை கையாள்வதற்கு இதுதான் மிகச்சரியான வழி. எனவே பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி, பரம்பரை வரி போன்ற முற்போக்கான வரியை விதிக்க நாங்கள் நிதியமைச்சரை வலியுறுத்து கிறோம். கடந்த 2012 முதல் 2021 வரை என 11 ஆண்டுகளில் ஏராளமான செல்வம் இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 40% செல்வம் 1 சதவிகித பெரும் பணக்காரர்களும், வெறும் 3% செல்வத்தை

50 சதவிகித சாமானிய மக்களும் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்கள். வரி விதிப்பைப் பொறுத்த வரையில் பணக்காரர்களைவிட சாமானி யர்களிடமும், நடுத்தர மக்களிடமும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை.

ஆக்ஸ்பாம் அறிக்கை: ஏழைத்தாயின் மகன் ஆட்சியில் யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? - சாட்டை சுழற்றிய முரசொலி!

பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான எதிர்மறையான ஊகங்கள் இந்தியாவில் எழுப்பப்பட்டு வந்தாலும், யார் கையில் 40 சதவிகித பொருளாதார வலிமை இருக்கிறது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பொருளாதாரம் சுருங்குகிறது, உற்பத்தி வளர்ச்சி குறைகிறது, உற்பத்தி செயல்பாடு குறைகிறது, சிறு – குறு நிறுவனங்களின் லாபம் குறைகிறது, பணவீக்கம் அதிகரிக்கிறது, பொருள்களின் விலை அதிகரிக்கிறது - இப்படி எல்லாம் பல புள்ளிவிவரங்கள் சொன்னாலும் இது ஒரு சதவிகித பணக்காரர்களை பாதிப்பதாக இல்லை. 50 சதவிகித சாமானியர்களை பாதிப்பதாக மட்டுமே இருக்கிறது. இது 99 சதவிகிதம் பேரின் பிரச்சினையாக மட்டுமே இருக்கிறது.

“நானும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான், நானும் மிடில் கிளாஸ்தான்” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதனால் நடுத்தரக் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

ஆக்ஸ்பாம் அறிக்கை: ஏழைத்தாயின் மகன் ஆட்சியில் யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? - சாட்டை சுழற்றிய முரசொலி!

நான் என்னை நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றுதான் அறிமுகம் செய்து கொள்வேன் என்றும் சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி அவர்களும் தன்னை ஏழைத் தாயின் மகன் என்றுதான் அறிமுகம் செய்து கொள்கிறார். ஆனால் இவர்கள் யாருக்காக வேலை பார்க்கிறார்கள்? இவர்களால் நன்மை அடைவது யார்? யாருக்குச் சேவகம் செய்கிறார்கள்? யார் இவர்களால் பலன் அடைந்துள்ளார்கள்?

40 சதவிகிதச் செல்வத்தை வைத்திருக்கும் 1 சதவிகிதம் பேர் பலனடையும் வகையிலான பொருளாதாரச் சூழல்தான் இந்தியாவில் இருக்கிறது. 3 சதவிகிதச் செல்வத்தை பகிர்ந்து கொள்ள 50 சதவிகிதம் பேரை வைத்திருக்கும் நிலையில்தான் இந்தியாவின் பொருளாதாரம் இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. யாருக்கு மட்டும் என்பதுதான் கேள்வி! ஒருசில பேருக்கு மட்டும் என்பதே பதில்!

banner

Related Stories

Related Stories