தமிழ்நாடு

Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!

விஜயின் மனைவியை பற்றி தவெக-வின் Vulguar Warriors ஆபாசமாக பேசுவதை கூட கண்டிக்காத விஜய் எந்த பெண்ணுக்காக இருப்பார்? என்று தவெக உறுப்பினர் ரஞ்சனா நாச்சியார் கேள்வியெழுப்பியுள்ளார்.

Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விஜயின் விவாவரகத்துக்கு விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், தன்னை விஜய் மன ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும், தன்னை தனி அறையில் வைத்து பூட்டி கொடுமைப்படுத்தியதாகவும் விஜயின் மனைவி சங்கீதா பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு நடிகையோடு விஜய் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்திருந்தார். மேலும் இந்த விவாகரத்து விவகாரம் "Worth ஏ இல்லை" என்றும் விஜய் பேசியுள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக விஜயின் கட்சியை சேர்ந்த பலரும் இதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!

நேற்று (மார்ச் 08) மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் வெளியிட்ட அறிக்கையில், "எது Worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது திருமண வாழ்க்கையா?, பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா?" என்று சரமாரியாக கேள்வி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக கெருகம்பாக்கமத்தில் உள்ள தனது இல்லத்தில் ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு :-

சமுதாயத்தில் விவாகரத்து நடப்பது பெருகிக்கொண்டே போகக்கூடிய நிலையில், தமிழக வெற்றி கழக தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பது கலாச்சார சீர்கேடு. விஜயின் விவாகரத்து விவகாரம் மட்டும் பேசுபொருளாக மாறிய காரணம், அவர் ஒரு கட்சியின் தலைவர். அவரை பின் தொடர்பவர்கள், அவரை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இது போல் செயல்பட்டால் அது நல்லது அல்ல.

Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!

விஜயின் மனைவி, விஜய்க்கு ஒரு நடிகையோடு திருமணத்தை மீறிய உறவு உள்ளது என்கிறார். அவராவது அந்த நடிகையின் பெயரை குறிப்பிடாமல் நாகரீகமாக நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்திருந்தார். ஆனால் விஜயோ, அந்த நடிகையை பொது வெளியில் அந்த நபரையே கூட்டிக்கொண்டு வருகிறார்.

எல்லாத்துக்குமே ஒரு அரசியல் கட்சி மீது பழியை போடுவதா? விஜயின் மனைவி, விஜய் மீது புகார் கொடுப்பதற்கும் மற்ற அரசியல் கட்சிதான் காரணம் என்று கூறுவது மிகவும் கேவலமான ஒரு விஷயம். தவெக-வின் Vulguar Warriors, விஜயின் மனைவி சங்கீதாவை பற்றி ஆபாசமாக பேசுகிறார்கள். இதை கூட விஜய் கண்டிக்க முடியவில்லை என்றால், விஜய் எந்த பெண்ணுக்காக போராடுவார்?

Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!

மேடை ஏறி பெண்ணியம் பேசும் விஜய், தற்போது கண்ணியம் இல்லாமல் நடந்துகொள்வது நாகரீகமாக இல்லை. மாற்றம் கொடுக்கக் கூடிய விஜய் இப்படி மாற்றம் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. விஜயின் மனைவி விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள இந்த நேரத்தில், அவரை வேண்டுமென்றே வெறுப்பேற்றுவதற்காகவே ஒரு நடிகையுடன் வெளியில் அழைத்து சுற்றுவது பார்ப்பதற்கு நன்றாக இல்லை.

தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக வேலு நாச்சியாரையும், அஞ்சலையம்மாளையும் வைத்திருக்கும் விஜய், அவர்கள் வழியில் நடக்கவில்லை. இதுவரை எந்த அரசியல் தலைவர்கள் மீதும், அவரது மனைவியே நீதிமன்றம் வரை சென்று புகார் கொடுத்ததில்லை.

விஜயின் கார் முன்பு ஒரு தவெக பெண் நிர்வாகி விழுந்தாரே, அவரை பற்றியோ, விஷம் குடித்து ஒருவர் மருத்துவமனையில் கிடந்தாரே, அவரை பற்றியோ விஜய்க்கு கவலை இல்லை. ஏன் விஜய் கட்சியின் நிர்வாகிகள் கூட அவர்களை சென்று பார்க்கவில்லை. உங்கள் கட்சியின் பெண் நிர்வாகிக்கு ஒன்று என்றால் கேட்க மாட்டீர்கள், உங்கள் மனைவிக்கு ஒரு பிரச்சினை என்றாலும் கேட்க மாட்டீர்கள் என்றால், நீங்கள் எல்லாம் என்ன தலைவர்?

Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!

இளைய தலைமுறைக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டை விஜய் காட்டவில்லை. தனது மனைவியை வெறுப்பேற்ற வேண்டும் என்று விஜய் இது போன்று செய்துவிட்டு, இதற்கு பின்னால் ஒரு அரசியல் கட்சி உள்ளது என்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது? என்னுடைய தலைவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், என்னுடைய தலைவன் மனைவியே காப்பாற்றவில்லை என்றால் என்னை எப்படி காப்பாற்றுவார்?

கரூர் விஷயத்துல இருந்து எல்லா விஷயத்துக்கும் தவெக-வினராகிய நாங்கள் விஜய்க்கு முட்டுக் கொடுக்கிறோம். ஆனால் அவரின் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கிறது. மக்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டாரா? விஜயை பின்பற்றக்கூடிய இளைஞர்கள் தவறாக போக விஜய் வழிவகை செய்கிறார். தனிமனித ஒழுக்கம் ஒரு தலைவனுக்கு தேவை." என்றார்.

banner

Related Stories

Related Stories