வைரல்

“அந்த மனசு தான் சார்..” -போருக்கு மத்தியில் நாய் குட்டியை காப்பாற்றிய உக்ரைன் வீரர்கள்.. வைரலாகும் VIDEO!

ஆழ குழியில் விழுந்த நாய் குட்டியை உக்ரைன் வீரர்கள் காப்பற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“அந்த மனசு தான் சார்..” -போருக்கு மத்தியில் நாய் குட்டியை காப்பாற்றிய உக்ரைன் வீரர்கள்.. வைரலாகும் VIDEO!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் உலகளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் சில நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், மற்ற சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். அதோடு இந்த போரானது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

சுமார் 10 மாதங்களாக தொடர்ந்து நடைபெறும் இந்த போரில், உக்ரைன் இராணுவ வீரர்களும், ரஷ்யா இராணுவ வீரர்களும் பலர் உயிரிழந்தனர். போருக்கு முன்பே உக்ரைன் நாட்டு பெண்கள், குழந்தைகள் அந்நாட்டு அரசு பத்திரமாக வெளியேற்றினர். இந்த போரில் வீரர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் உயிரை துறக்க நேரிடுகிறது.

“அந்த மனசு தான் சார்..” -போருக்கு மத்தியில் நாய் குட்டியை காப்பாற்றிய உக்ரைன் வீரர்கள்.. வைரலாகும் VIDEO!

அனைவர் மத்தியிலும் போர்க்களமாக காட்சியளிக்கும் இந்நாடுகள், எப்போது போரை நிறுத்துவர் என்று அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த போர் சூழலிலும் இராணுவ வீரர்களுக்கு மனிதாபிமானம் வெளிப்படக்கூடிய ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அதாவது உக்ரைன் போர் வீரர்கள் குழியில் வீழ்ந்த ஒரு நாய் குட்டியை காப்பாற்றுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உக்ரைன் போர் வீரர்கள் ஆழ குழியில் விழுந்திருக்கும் ஒரு நாய் குட்டியை கண்டவுடன் அதனை காப்பாற்ற நினைக்கிறார்கள். அதன்படி கூட்டாக சேர்ந்து ஒரு முயற்சியை செய்கின்றனர்.

“அந்த மனசு தான் சார்..” -போருக்கு மத்தியில் நாய் குட்டியை காப்பாற்றிய உக்ரைன் வீரர்கள்.. வைரலாகும் VIDEO!

அதன்படி இராணுவ வீரர் ஒருவரின் இரு கால்களையும், 2 வீரர்கள் பிடித்துக்கொண்டனர். பின்னர் அவர் தலை குப்புற அந்த குழியில் நேராக உள்ளே செல்கிறார். தொடர்ந்து அவர் குரல் கொடுத்ததும், கால்களை பிடித்திருந்த 2 பெரும் அவரை வெளியே தூக்குகின்றனர். இதையடுத்து உள்ளே சென்ற வீரர், குழியில் வீழ்ந்த நாய் குட்டியுடன் மேலே வருகிறார்.

இந்த வீடியோவை கடந்த மாதம் (நவம்பர்) 18-ம் தேதி உக்ரைனின் உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

ஆழ குழியில் விழுந்த நாய் குட்டியை உக்ரைன் வீரர்கள் காப்பற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பொதுமக்களிடையே உக்ரைன் வீரர்களின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories