வைரல்

பெங்களூரு விமான நிலையத்தில் கைக்கடிகாரத்தை தொலைத்த ஜெர்மன் பயணி.. மீட்க உதவிய Mail: நெகிழ்ச்சி சம்பவம்!

பெங்களூரு விமான நிலையத்தில் ஜெர்மனி பயணி தொலைத்த கைக்கடிகாரத்தை மீட்டு அவரிடமே ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் கைக்கடிகாரத்தை தொலைத்த ஜெர்மன் பயணி.. மீட்க உதவிய Mail: நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் ஒரு பொருளைத் தொலைத்து விட்டால் அது மீண்டும் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கவே இருக்காது. இதற்குக் காரணம் தொலைத்த பொருள் மீண்டும் கிடைப்பது ஆச்சரியமான நிகழ்வாகிவிட்டது. இதனால்தான் ஒரு பொருள் தொலைந்துவிட்டால், அது முடிந்த கதை என்று நாம் நினைத்து விடுகிறோம். இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் தொலைத்த ஒரு பொருளை மீண்டும் அவரது கைக்கே கிடைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் கைக்கடிகாரத்தை தொலைத்த ஜெர்மன் பயணி.. மீட்க உதவிய Mail: நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் ஆண்டேர்ஸ் ஆண்டர்சென். இவர் தொழில் ரீதியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். பிறகு தனது வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு திரும்பியுள்ளார். அப்போது பெங்களூருவில் விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் தனது பாட்டி பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரம் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் விமான நிலைய எக்ஸ்ரே ட்ரேவில் தொலைந்துபோனது அவருக்கு நினைவிற்கு வந்துள்ளது. மேலும் 1.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் எப்படித் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் என்ற கேள்வியும் அவருக்கு இருந்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் கைக்கடிகாரத்தை தொலைத்த ஜெர்மன் பயணி.. மீட்க உதவிய Mail: நெகிழ்ச்சி சம்பவம்!

இருப்பினும், தனது பாட்டி பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரம் என்பதால் ஆண்டர்சென் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திற்கு கைக்கடிகாரம் தொலைத்தது குறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இந்த மின்னஞ்சலைப் பார்த்த அதிகாரிகள் உடனே விமான நிலைய நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு CISF வீரர்கள் அங்கு சென்று அவரது கைக்கடிகாரத்தை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து ஆண்டர்செனுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலைப்பார்த்து அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார். மேலும் ஜெர்மன் சென்று சேரும்போது அவரது கைக்கடிகாரமும் பார்சல் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனது கைக்கடிகாரத்தை மீட்டுக் கொடுத்த CISF ஊழியர்கள், பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் டாடா குரூப் குழுமத்திற்கும் ஆண்டர்சென் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories