வைரல்

“நடைபயிற்சிக்கு செல்லும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த கோவில் யானை”: கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி! Video

புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“நடைபயிற்சிக்கு செல்லும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த கோவில் யானை”: கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி! Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதலமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.

“நடைபயிற்சிக்கு செல்லும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த கோவில் யானை”: கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி! Video

லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் யானைக்கு பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தனர். தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றிருந்தது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

“நடைபயிற்சிக்கு செல்லும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த கோவில் யானை”: கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி! Video

இதனிடையே கிரேன் மூலம் யானை லட்சுமி லாரியில் வைக்கப்பட்டு, உயிரிழந்த காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் முன்பு முன்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் மலர் மற்றும் மாலைகளை கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“நடைபயிற்சிக்கு செல்லும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த கோவில் யானை”: கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி! Video

மேலும் யானை லட்சுமி உயிரிழந்ததை அடுத்து கோவில் நடைகள் சாத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 3 மணி அளவில் வாழைக்குளம் பகுதியில் அடக்கம் செய்வதற்கு முன்னதாக யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories