வைரல்

அடேங்கப்பா..'Snake'கேம் கடைசி லெவல் இப்படித்தான் இருக்குமா? 90's கிட்ஸ்களே இந்த வீடியோவை தவற விடாதீர்கள்!

'Snake' கேமின் இறுதிக்கட்டம் வரை சென்றால் ஆட்டம் எப்படி முடியும் என்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடேங்கப்பா..'Snake'கேம் கடைசி லெவல் இப்படித்தான் இருக்குமா? 90's கிட்ஸ்களே இந்த வீடியோவை தவற விடாதீர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

90'ஸ் கிட்ஸ்களின் சிறிய வயதில் பிரபலமான விளையாட்டாக இருந்தது 'Snake' என அழைக்கப்படும் பாம்பு விளையாட்டுதான். நோக்கியா போன்களில் இது அறிமுகமான புதியில் இதற்காகவே நோக்கியா போனை அடம்பிடித்தது வாங்கியவர்கள் பலர்.

கட்டத்தின் உள்ளே இருக்கும் சிறிய பந்தை பிடித்தால் பாம்பு பெரிதாக வளரும். அதே நேரம் தனது உடலில் பாம்பின் தலை பட்டால் கேம் அதோடு முடிந்து விடும். இதில் High Score வைப்பது அப்போது உலகின் மிக பெரிய சாதனையாக கருதப்படும்.

அடேங்கப்பா..'Snake'கேம் கடைசி லெவல் இப்படித்தான் இருக்குமா? 90's கிட்ஸ்களே இந்த வீடியோவை தவற விடாதீர்கள்!

இந்த விளையாட்டை பலர் முடிந்திருக்கவே மாட்டோம். அதற்குள் ஆட்டமிழந்து விடுவோம். வெகு சிலர் மட்டுமே அந்த அளவு பொறுமையாக விளையாடி இந்த கேமின் இறுதிக்கட்டம் வரை சென்றிருப்பார்கள். அப்போது கூட இதற்கு மேல் வழியே இன்றி ஆட்டமிழக்கதான் முடியும். அப்படிதான் இந்த கேமே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது இதை விட தொழில்நுட்பங்களில் முன்னேறிய பல கேம்கள் வந்துவிட்ட நிலையிலும் 90'ஸ் கிட்ஸ்கள் இப்போது இந்த கேமை பார்த்தாலும் ஒரு முறையாவது விளையாடன்த்தான் செய்வார்கள். அந்த அளவு அவர்களின் மனதில் பதிந்த விளையாட்டு என்றால் அது 'Snake' தான்.

இந்த நிலையில், தற்போது கேமின் இறுதிக்கட்டம் வரை சென்றால் ஆட்டம் எப்படி முடியும் என்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் செல்ல இடமே இல்லாத நிலையில், பாம்பு தனது வாலில் தலை பட்டு ஆட்டம் அதோடு முடிந்து விடும். இந்த காட்சியை பார்த்த பலர் அந்த விடீயோவையோ தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories