வைரல்

கேரளாவில் ரூ.47,000க்கு ஏலம் போன பூசணிக்காய் - அப்படி என்ன ஸ்பெஷல் ?

கேரளாவில் 5 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ரூ.47,000க்கு ஏலம் போன சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ரூ.47,000க்கு ஏலம் போன பூசணிக்காய் - அப்படி என்ன ஸ்பெஷல் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டப்படும். சில இடங்களில் ஓணம் பண்டிக்கை அன்று தங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் தோட்டத்தில் விளைவித்த காய்கறி, பழங்களை ஏலம் விட்டும் பண்டிகையை கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில், ஓணம் பண்டிகை அன்று இடுக்கி மாவட்டத்தில் உள்ள செம்மன்னாரி என்ற கிராமத்தில் பொது ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது, ஆடு, கோழி, மாடு மற்றும் காய்கறிகள் என ஆர்வமுடன் ஏலம் சென்றது.

கேரளாவில் ரூ.47,000க்கு ஏலம் போன பூசணிக்காய் - அப்படி என்ன ஸ்பெஷல் ?

இதில் ஜார்ஜ் என்பவர் தனது வீட்டில் விளைந்த 5 கிலோ கொண்ட பூசணிக்காய்யை ஏலத்தில் விட்டார். ஆரம்ப விலை ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏலத்தில் பூசணிக்காயின் விலை உயர்ந்துக்கொண்டே போனது. இறுதியாக அதேபகுதியைச் சேர்ந்த சிபி என்பவர் ரூ.47,000க்கு பூசணிக்காயை ஏலம் எடுத்து வெற்றிப்பெற்றார்.

போட்டிப்போட்டு ஏலம் எடுத்ததில் முதல் முறையாக ஒரு பூசணிக்காயை 47 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories