வைரல்

“விற்பனைக்கு வரும் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக்”: விலையை கேட்டால் தலைச்சுற்றும் - எவ்வளவு தெரியுமா?

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா தன்னுடைய தேநீர் கோப்பையில் பயன்படுத்திய டீ பேக்-ஐ, eBay எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் விற்கப்போவதாக அறிவித்துள்ளது.

“விற்பனைக்கு வரும் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக்”: விலையை கேட்டால் தலைச்சுற்றும் - எவ்வளவு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. செப்டம்பர் 8 அன்று மாலை 6 மணிக்குப் பின்னர் ராணி எலிசபெத் மறைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இந்த நிலையில், உடல்நிலை மோசமான நிலையில், பால்மோரா இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“விற்பனைக்கு வரும் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக்”: விலையை கேட்டால் தலைச்சுற்றும் - எவ்வளவு தெரியுமா?

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத். பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரச பதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்க வைத்துள்ளார்.

தற்போது, பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட, லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரது மகன்களான, இளவரசர்கள் சார்லஸ், எட்வர்ட், ஆண்ட்ரூ, மகள் ஆனி ஆகியோர் அவருடனேயே இருந்தனர்.

ராணி எலிசபெத்தின் மறைவையடுத்து அவரது மகனான 73 வயது சார்லஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ், இங்கிலாந்து மன்னராகிறார். சார்லஸ் தான் நீண்ட கால அரச குடும்ப வாரிசு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். மன்னர் பதவிக்காக காத்திருக்கும் வாரிசுக்கு என்று குறிப்பிட்ட பணியோ, பொறுப்போ இல்லை. அதனால், அவரது பணியே காத்திருப்பாக மட்டும் தான் இருந்தது.

“விற்பனைக்கு வரும் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக்”: விலையை கேட்டால் தலைச்சுற்றும் - எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா தன்னுடைய தேநீர் கோப்பையில் பயன்படுத்திய டீ பேக்-ஐ, eBay எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் விற்கப்போவதாக அறிவித்துள்ளது. சுமார் 12,000 டாலருக்கு , அதாவது இந்திய மதிப்பில் ரூ.9.5 லட்சத்திற்கு அந்த டீ பேக்-கின் விலை எனக் கூறப்படுகிறது.

அப்படி இந்த டீ பேக் என்ன சிறப்பு என்றால், ராணி எலிசபெத் 1990களில் அவருக்காக விண்ட்சர் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த விற்பனை இணைய தளத்தில் “வரலாற்றின் சிலவற்றை சொந்தமாக்குங்கள்” என்ற வாசகமும் நம்பகத்தன்மை குறிக்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் எக்ஸலன்ஸ்(IECA) வழங்கிய சான்றிதழும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories