வைரல்

குறும்படம் தயாரிக்க அதிக பணத்தை செலவு செய்த தந்தை.. தட்டிக்கேட்ட மகனுக்கு கத்திக்குத்து - பகீர் சம்பவம்!

பூந்தமல்லி அருகே குறும்படம் தயாரிக்க அதிக பணத்தை செலவு செய்த தந்தையை தட்டி கேட்ட மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறும்படம் தயாரிக்க அதிக பணத்தை செலவு செய்த தந்தை.. தட்டிக்கேட்ட மகனுக்கு கத்திக்குத்து - பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பூந்தமல்லி அடுத்த திருமழிசை ஒலிம்பியா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (62 ). இவர் அதிகமாக பணத்தை குறும்படம் தயாரிப்பதற்கும், ரியல் எஸ்டேட் செய்வதற்கும் பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக மகன் அவரை தட்டி கேட்டு உள்ளார். இருவருக்குள்ளே ஏற்பட்ட மோதலில் தந்தை காய்கறி நறுக்கும் கத்தி எடுத்து மகன் கழுத்தில் குத்தி உள்ளார். படுகாயம் அடைந்த மகன் ஹிந்து பிரகாஷ் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

மகனை கத்தியால் குத்திய தந்தை பிரகாஷை வெள்ளவேடு போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். குறும்படம் தயாரிக்க அதிக பணம் செலவு செய்த தந்தையை தட்டி கேட்ட மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் திருமழிசை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories