வைரல்

90 கிட்ஸ் vs 2K கிட்ஸ் .. 10 வருட இடைவெளி: இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

இன்று 90s கிட்ஸ், 2K கிட்ஸ் என ஒரு முரண்பாடு உருவாகி சுவாரஸ்யமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

90 கிட்ஸ் vs 2K கிட்ஸ் .. 10 வருட இடைவெளி: இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

90களில் பிறந்தவர்கள் 90s கிட்ஸ் என சொல்லப்படுகின்றனர். 2000-த்துக்குப் பிறகு பிறந்தவர்கள் 2k கிட்ஸ் என சொல்லப்படுகிறார்கள். வெறும் 10 வருடங்கள்தான் இடைவெளி என்றபோதும் அந்தப் பத்து வருடங்களில் முக்கியமான மாற்றம் நேர்ந்தது. தொழில்நுட்பப் புரட்சி!

90s கிட்ஸ் காலத்தில் செல்பேசி அறிமுகமாகி இருந்தது. அவ்வளவுதான். ஆனால் 2k கிட்ஸ் காலத்தில் செல்பேசியில் இணையம் வந்து, முகநூல், வாட்சப், இன்ஸ்டா என சமூகதளங்கள் வந்து ஒரு பெரும் பாய்ச்சலை தொழில்நுட்பம் நிகழ்த்தியிருந்தது. எனவே வெறும் 10 வருடங்களில் நேர்ந்த மாற்றம் என்றாலும் அந்த மாற்றம் ஏற்படுத்திய வாழ்வியல் மற்றும் சிந்தனை முறைகள் இரு தலைமுறையினரையும் இரு வேறு நாகரிகங்கள் எனக் கருதும் வகையில் தூர நிறுத்தி வைத்திருக்கிறது.

90 கிட்ஸ் vs 2K கிட்ஸ் .. 10 வருட இடைவெளி: இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

இதுபோன்ற பிளவு சமூகத்தில் இளைஞர்கள் மத்தியில் நேர்ந்திருக்கிறதா?

நேர்ந்திருக்கிறது. Hippies என அழைக்கப்படும் ஒரு வாழ்க்கை முறை இத்தகையப் பிளவின் விளைவாகதான் நேர்ந்தது. ஆனால் அது வெறும் தொழில்நுட்ப நவீனங்களால் நேராமல், அரசியல் நிலைப்பாட்டால் உருவானது.

சமூக வாழ்க்கையைப் புறக்கணித்து தனி வாழ்க்கைகளை ஹிப்பிகள் வாழ்ந்தனர். காடுகளில் சில குழுக்கள் வசித்தனர். மலைகளில் சில குழுக்கள் வசித்தனர். சமூகம் முன் வைக்கும் கலாசார, நுகர்வு, சிந்தனை எல்லாவற்றையும் புறக்கணித்து அன்பே பிரதானம் எனப் பேசக் கூடிய வாழ்க்கைமுறையை ஹிப்பிகள் உருவாக்கி இருந்தனர்.

ஹிப்பி கலசாரத்தின் பிரதான விஷயங்களாக இசை, குழு வாழ்க்கை முதலியவை இருந்தன. அடிப்படையில் அரசு, குடும்பம் முதலிய நிறுவனங்களுக்கு எதிரான மனநிலையை ஹிப்பிகள் பிரசாரம் செய்தனர்.

90 கிட்ஸ் vs 2K கிட்ஸ் .. 10 வருட இடைவெளி: இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

அமெரிக்காவின் வியட்நாம் மீதான போரும் பொருளாதார வீழ்ச்சியும் வேலையின்மையும் இளைஞர்களை அமெரிக்காவுக்கு எதிரான கலாசாரத்தை தேட வைத்தது. அமெரிக்கா பிரசாரம் செய்யும் முதலாளித்துவம், கிறித்துவம், வளர்ச்சி, பணம், நிறவெறி முதலிய விஷயங்களை எதிர்க்கும் போக்கு 1960களில் உருவானது. இன்று நம் தலைமுறையிடம் காணப்படும் அதே வகை அவநம்பிக்கையின் விளைவிலிருந்துதான் ஹிப்பிகளும் தோன்றினர். எனவே அமெரிக்கா போதிக்கும் பாணியிலான சமூக வாழ்க்கையை ஹிப்பிகள் புறக்கணித்தனர்.

அன்பு, காதல், சமாதானம், இயற்கை முதலிய விஷயங்களை நோக்கி அதிக ஈடுபாடு காட்டினர். மேற்குலகுக்கு எதிர்திசையில் இருந்த கிழக்குலக வாழ்க்கை மற்றும் தத்துவம் நோக்கி ஆர்வம் காட்டினர். உறவுகளையும் உடைமைகளையும் மறுத்த புத்தர், மதத்தை எதிர்த்த இயேசு முதலிய அடையாளங்கள் ஹிப்பிகளை வெகுவாக ஈர்த்தன. அரசுகள் போதிக்கும் சமூக வாழ்க்கைகளை நிராகரித்து காடுகளுக்குள்ளும் வேறு பகுதிகளிலும் கம்யூன் வாழ்க்கை வாழத் தொடங்கினர்.

90 கிட்ஸ் vs 2K கிட்ஸ் .. 10 வருட இடைவெளி: இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

உலகம் முழுவதும் பரவிய அமெரிக்க -ஐரோப்பிய தத்துவ மறுப்பும் புதிய தத்துவ தேடலும் இணைந்ததில்தான் ஹிப்பிகள் உருவாகினர். சமீபமாக இத்தகைய ஹிப்பிகள் குறைந்திவிட்டனர் என்றாலும் ஆங்காங்கே தனிமையில் வாழும் போக்குகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்று இருக்கும் 90s கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ் முரணில் இத்தகைய அரசியல் நிலைப்பாடு எதுவும் முன்வைக்கப்படவில்லை. அன்பு என்றெல்லாம் கூட 2k கிட்ஸ் பேசவில்லை.

எவர் என்னவானாலும் நாம் வாழ வேண்டும், நன்றாக வாழ வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருக்கிறது. துயரம்தான்!

banner

Related Stories

Related Stories