சினிமா

கணவன், மனைவிக்கு இடையே பொருளாதாரம் குறிக்கிட்டால் என்ன ஆகும்?.. Revolutionary Road படம் சொல்லும் செய்தி!

உங்கள் இருவருக்கும் இடையில் ஒரு சின்ன தனிவிருப்பம் வந்தாலே சிக்கல் தொடங்குமளவு இலகுவாக இருக்கக்கூடிய உறவில் பொருளாதாரத்தை நுழைத்தால் என்ன ஆகும்?

கணவன், மனைவிக்கு இடையே  பொருளாதாரம் குறிக்கிட்டால் என்ன ஆகும்?.. Revolutionary Road படம் சொல்லும் செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Revolutionary Road எனவொரு ஆங்கிலப்படம். ஹாலிவுட் திரையுலகின் கொண்டாடப்பட்ட ஜோடியான லியோனார்ட் டிகாப்ரியோவும் கேட் வின்ஸ்லட்டும் நடித்திருப்பார்கள். டைட்டானிக் படத்துக்குப் பிறகு இருவரும் நடித்தப் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கியது. டைட்டானிக் படத்தில் காதல் என்றால், இப்படத்தில் திருமண உறவு.

இந்த படத்தின் கதை முக்கியமான காலத்தை பிரதிபலித்து எடுக்கப்பட்டது. வால்ஸ்ட்ரீட் முன்னிறுத்தும் சந்தை பொருளாதாரத்தை தன் வேலையாக செய்யும் நாயகனுக்கும் கலை, நாடகம் என இயங்கும் நாயகிக்கும் இடையிலான திருமண பந்தம் சிதைவதே கதை.

கணவன், மனைவிக்கு இடையே  பொருளாதாரம் குறிக்கிட்டால் என்ன ஆகும்?.. Revolutionary Road படம் சொல்லும் செய்தி!

கணவனால் உருவாக்கப்பட்ட கருவை, அவன் தன் லட்சியத்தை பொருட்படுத்தாமல் ஏமாற்றிவிட்டான் என்ற வேதனையில், அழிக்க முயன்று நாயகி உயிர் விடுவதுதான் இறுதி.

இந்த படத்தை இரண்டு காரணங்களுக்காக பார்க்கலாம். ஒன்று, கணவன், மனைவி பிணக்கு எவ்வளவு இலகுவாக பற்றியெறியக் கூடிய நெருப்பு என உணர. இரண்டு, பொருளாதாரம் ஓர் உறவை எப்படி சிதைக்கும் வல்லமை பெறுகிறது என்பதை புரிந்துகொள்ள.

படத்தின் க்ளைமேக்ஸ் உண்மையில் பழி வாங்கல் மட்டுமே. இரண்டாம் பாதி நெடுக பழிக்கு பழி, கோபம், வஞ்சம் மட்டுமே இருக்கும். நாம் கொண்டாடும் உறவுகள் எல்லாம் அவ்வளவு புனிதமானவை அல்ல என முகத்தில் அறையும் படம். சரியான இடத்தில் உரசிவிட்டால் தெரியும், நீங்கள் அத்தனை நாளும் குடும்பம் நடத்தியது ஒரு எதிரியோடு என.

கணவன், மனைவிக்கு இடையே  பொருளாதாரம் குறிக்கிட்டால் என்ன ஆகும்?.. Revolutionary Road படம் சொல்லும் செய்தி!

ஆண் உளவியல், பெண் உளவியல், லட்சியங்கள், சமூக மனம் இவற்றுக்கு நடுவே பொருளாதாரத்தை கொண்டு விட்டால், கையை விட்ட தேனிக்கூடு போல் எல்லாம் எப்படி சிதைந்து சின்னாபின்னமாகும் என்பதை பலரின் வாழ்வுகளில் கண்டறிய முடியும்.

இயல்பாகவே ஓர் உறவு நீடிக்க வேண்டுமெனில் பரஸ்பர மதிப்பு, புரிதல், தன்முனைப்பு இல்லாமை, empathy என பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதுவும் உங்கள் கலவி விருப்பங்கள் தொடங்கி உங்களின் யாருக்குமே தெரியாத பல விஷயங்களை தெரிந்திருக்கும் ஒருவர் எத்தனை பொறுப்புடன் இருக்க வேண்டும்? அவரிடம் நீங்கள் எத்தனை பொறுப்புடன் இருக்க வேண்டும்? பெற்றோர் உள்ளிட்ட யாரும் பார்க்காத உங்களை அறிந்த ஒருவரிடம் நீங்கள் எப்படி இருக்க வேண்டும், அவர் எப்படி இருக்க வேண்டும்?

கணவன், மனைவிக்கு இடையே  பொருளாதாரம் குறிக்கிட்டால் என்ன ஆகும்?.. Revolutionary Road படம் சொல்லும் செய்தி!

உங்கள் இருவருக்கும் இடையில் ஒரு சின்ன தனிவிருப்பம் வந்தாலே சிக்கல் தொடங்குமளவு இலகுவாக இருக்கக்கூடிய உறவில் பொருளாதாரத்தை நுழைத்தால் என்ன ஆகும்? அப்படி ஓர் உறவுக்குள் பொருளாதாரம் நுழைக்கப்படுகிறதெனில், அந்த பொருளாதாரத்தின் நோக்கம் என்னவாக இருக்கும்? அது முன்னிறுத்தும் அரசியல் எத்தகையதாக இருக்கும்?

‘புரட்சிகரப் பாதை’ என அர்த்தம் தொனிக்கும் இப்படத்தில் சொல்லப்படும் கதை முடிவது உண்மையில் புரட்சியில் அல்ல. அந்த முடிவு நமக்கு கொடுக்கும் புரிதல்தான், படம் எதிர்நோக்கும் புரட்சி!

banner

Related Stories

Related Stories