சினிமா

Modern Times .. இன்றைய இயந்திர வாழ்க்கைக்குப் பொருந்தும் சார்லி சாப்ளின் படங்கள்!

Modern Times படம், வாழ்க்கை பற்றிய வறிய ஒருவனின் எளிய கற்பனை.

Modern Times .. இன்றைய இயந்திர வாழ்க்கைக்குப் பொருந்தும்  சார்லி சாப்ளின் படங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

சாப்ளினின் படங்கள் வெறும் சினிமா என்ற அளவில் நின்று விடுவதில்லை. அவை திரைகளைக் கடந்து மனிதனின் உள்ளுக்குள் நுழைந்து அவனது பிரச்சினைகளில் ஊடுருவி நரம்புகளில் உணர்வுகளை கடத்தி மூளைக்குள் உண்மையைப் பொதிய வைக்க வல்லவை.

சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்டேட்டர், தெ கிட் எனப் பலப் படங்களை சார்லி சாப்ளின் இயக்கியிருந்தாலும் இன்றைய இயந்திர வாழ்க்கைக்குப் பொருந்தக் கூடிய ஒரு படத்தை அவர் எடுத்திருந்தார்.

Modern Times .. இன்றைய இயந்திர வாழ்க்கைக்குப் பொருந்தும்  சார்லி சாப்ளின் படங்கள்!

Modern Times!

வாழ்வதற்கான தேவையாக பணம் மாற்றப்பட்டு, அதை அடையும் வழியாக உத்தியோகம் ஆக்கப்பட்டபின் மனிதன் எப்படி எந்திரமாகிறான் என்பதைத் தெளிவாக் முன் வைத்தப் படம் அது.

Modern Times படத்தில் ஒரு காட்சி வரும். சாப்ளினும் நாயகியும் விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்பவர்கள். வேலை தொலைந்து, போலீஸ் பிடித்து, பின் வெளிவந்து, வீடின்றி அலைந்து கொண்டிருப்பார்கள். அந்த நேரத்திலும் கொஞ்சிக் கொள்ள இருவரிடமும் அழகான காதல் மிச்சம் இருக்கும்.

தான் வாழ விரும்பும் வாழ்க்கையை கற்பனையாக சாப்ளின் அப்போது நாயகியிடம் விவரிப்பார். அவர் கற்பனை, காட்சியாக விரியும்.

ஒரு கூட்டை போல் அழகாகவும் சின்னதாகவும் ஒரு வீடு. காதல் மனைவியாக நாயகி.

வேலை முடித்து வீட்டுக்கு வரும் சாப்ளினை நாயகி வரவேற்று உள்ளே செல்வார். ஜன்னல் வழி நுழையும் மாமரத்தின் மாம்பழம் வீட்டுக்குள் தொங்கி இருக்கும். அதை பறித்து சாப்ளின் சாப்பிடுவார். உணவை மனைவி தயார் செய்து கொண்டிருப்பார்.

உணவு மேஜைக்கு சாப்ளின் சென்று பார்ப்பார். ஜாடியில் பால் இருக்காது. வாசலுக்கு சென்று குரல் கொடுத்து அழைப்பார். ஒரு மாடு வந்து நிற்கும். அதன் மடிக்கு கீழ் ஜாடியை வைத்துவிட்டு, 'தயார்' என்ற பாணியில் அதன் முதுகை தட்டி கொடுப்பார். பசு பாலை தானாகவே ஜாடிக்குள் பீய்ச்சி அடிக்கும். பால் நிரம்பும் வரை, வீட்டு வாசலுக்கு இறங்கி தொங்கும் திராட்சையில் இருந்து ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டு கொண்டிருப்பார். ஜாடி நிரம்பிவிடும். மீண்டும் பசுவை இருமுறை தட்டுவார். அது பீய்ச்சுவதை நிறுத்திவிட்டு, நடந்து சென்று விடும்.

Modern Times .. இன்றைய இயந்திர வாழ்க்கைக்குப் பொருந்தும்  சார்லி சாப்ளின் படங்கள்!

ஜாடியை எடுத்து உணவு மேஜையில் சாப்ளின் வைப்பார். மனைவியும் உணவு எடுத்து வைப்பார். இருவரும் சேர்ந்து சாப்பிட தொடங்குவார்கள்.

வாழ்க்கை பற்றிய வறிய ஒருவனின் எளிய கற்பனை. வேலை, காதல் மனைவி, வீட்டுக்குள் வந்து இறங்கும் மரங்களின் பழங்கள், வாசல் தேடி வந்து பால் கொடுத்து விட்டு செல்லும் மாடு என கொஞ்சம் மிகை ஊட்டப்பட்டிருந்தாலும் எத்தனை அழகான கற்பனை!

அந்த கற்பனையின் ஒரு பத்து சதவிகிதத்தை கூட அடைய முடியாமல்தான் நாம் அனைவரும் ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் முடிவதாய் தெரியவே இல்லை இந்த modern times-ம் வறியவனின் கனவும்!

banner

Related Stories

Related Stories