வைரல்

ஜிம்முக்கு சென்று கணவரையும், அவரது தோழியையும் பொளந்து கட்டிய பெண் : காரணம் என்ன?

தோழியுடன் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த நபருக்கு, அவரது மனைவி, தர்ம அடி கொடுத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

ஜிம்முக்கு சென்று கணவரையும், அவரது தோழியையும் பொளந்து கட்டிய பெண் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தோழியுடன் உடற்பயிற்சிக் கூடத்தில், உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த நபருக்கு, அவரது மனைவி, தர்ம அடி கொடுத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உடற்பயிற்சிக் கூடத்தில், தனது தோழியுடன், அந்த நபர், உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆவேசமாக வந்த அந்த நபரின் மனைவி, அவரையும், அவரது தோழியையும் செருப்பால் அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தனது கணவருக்கும், அந்தப் பெண்ணிற்கும் தகாத உறவு இருப்பதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதனை மறுத்துள்ள அந்தப் பெண்ணின் கணவர், என் தோழியின் பெயர் கூட தனது மனைவிக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, கணவனும், மனைவியும், ஒருவர் மீது ஒருவர் போலிஸில் புகார் அளித்தனர். இளம்பெண் ஒருவர், தனது கணவனுக்கு தர்ம அடி கொடுத்த இந்த வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

- கார்த்திகேயன்

banner

Related Stories

Related Stories