இந்தியா

“பெண் வேட்பாளரிடம் அத்துமீறிய பா.ஜ.க அமைச்சர்.. முதல்வர் கண்முன்னே நடந்த அநாகரீகம்”: ம.பி-யில் அதிர்ச்சி!

பிரச்சார மேடையில் பா.ஜ.க பெண் வேட்பாளரிடம் அமைச்சர் அத்துமீறி நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பெண் வேட்பாளரிடம் அத்துமீறிய பா.ஜ.க அமைச்சர்.. முதல்வர் கண்முன்னே நடந்த அநாகரீகம்”: ம.பி-யில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு மக்களவை மற்றும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக மாநில முதல்வர் சிவராஜ் சிங்க சவுகான் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், ராய்கானி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பிரதிமாவுக்கு ஆதரவாக சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த கூட்டத்திற்காகப் பிரச்சார மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இதில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும், அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவுக்கு நடுவில் வேட்பாளர் பிரதிமா அமர்ந்திருந்தார். அப்போது சிவராஜ் சிங்குடன் பேசும் போது, பிரிஜேந்திர சிங்க வேட்பாளர் பிரதிமா பாக்ரி தொடையில் கை வைத்துக் கொண்டே பேசினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதிமா பாக்ரி என்ன செய்வது என்று தெரியாமல் மேடையில் அமர்த்தபடி தவித்துக் கொண்டிருந்தார். பின்னர் முதல்வர் சிவராஜ் சிங் வேட்பாளரை ஆதரித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அரவது அருகே ஓட்டு கேட்டபடி பிரதிமா பாக்ரி நின்று கொண்டிருந்தபோது, பின்னால் இருக்கையிலிருந்த அமைச்சர் பிரிஜேந்திர சிங், வேட்பாளரின் கூந்தல் முடியில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

பின்னர், தலைமுடியை யாரோ தொடுகிறார்கள் என்பதை உணர்ந்து திரும்பி பார்த்தார். அப்போது அமைச்சர் தனது கண்ணாடி கூந்தலில் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார். அடுத்தடுத்து அமைச்சர் அநாகரீகமாக நடந்து கொண்டதால் பிரச்சார மேடையில் முகம் சுழித்தபடி பிரதிமா பாக்ரி இருந்தார். அமைச்சர் பிரிஜேந்தகரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. அதில்,”வெட்கமில்லாத செயல். சத்னா பா.ஜ.க வேட்பாளரிடம் பா.ஜ.க அமைச்சர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பா.ஜ.க வேட்பாளர் சங்கடமாக இருப்பது அவரது முகத்திலேயே தெரிகிறது. சிவராஜ் சார், பா.ஜ.க தலைவர்களிடமிருந்து மகளைக் காப்பாற்றுங்கள்” என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories