வைரல்

பாம்பு பிடி வீரரை உறைய வைத்த ராஜ நாகம் : இணையத்தை அலற விட்ட வைரல் வீடியோ!

14 அடி கொண்ட ராஜ நாகம் ஒன்று பாம்பு பிடி வீரரை அலற விட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பு பிடி வீரரை உறைய வைத்த ராஜ நாகம் : இணையத்தை அலற விட்ட வைரல் வீடியோ!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் போன்ற ஊர்வன விலங்குகள் புகுவது வழக்கம். அவ்வாறு உட்புகுந்த பாம்பை வனத்துறையினர் அல்லது பாம்பு பிடி வீரர்கள் லாவகமாக பிடிக்கும் காணொளி இணையத்தில் வெளியாவது வழக்கம்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் கிராமத்தில் உள்ள வீட்டில் கழிவறைக்குள் நுழைந்த ராஜ நாகம் ஒன்றை பிடிக்கும் வீடியோ அண்மை நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்து காண்போரை அலற விட்டு வருகிறது. பெல்தங்காடி என்ற பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ண பட் என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்துவிட்டதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்திருக்கிறார் பாம்பு பிடி வீரர் அசோக்.

அப்போது கழிவறைக்குள் சென்ற பாம்பின் வாலை பிடித்து இழுக்கையில் எதிர்பாராத விதமாக சுமார் 14 அடி கொண்ட அந்த ராஜ நாகம் படமெடுத்து வந்ததால் பாம்பு பிடி வீரர் அசோக் நொடியில் வெளவெளத்து போனார். பின்னர், அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த ராஜ நாகத்தை சற்று விட்டு பிடித்து தான் கொண்டு வந்த பையில் அடைத்திருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நடந்த இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்ததோடு, ராஜ நாகத்தை பிடித்த அசோக் இரண்டாவது வாழ்வை பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories