வைரல்

’எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’: சாகசம் என்ற பேரில் மண்ணை கவ்விய இளைஞர்கள்-வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

பைக் சாகசம் செய்து சில்லறைகளை எண்ணிய இளைஞர்களுக்கு வசைவுகளை அள்ளித் தெளிக்கும் நெட்டிசன்கள்.

’எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’: சாகசம் என்ற பேரில் மண்ணை கவ்விய இளைஞர்கள்-வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொல்லாதவன் BGMல் பைக்கில் வித்தை காட்டி மண்ணை கவ்விய இளைஞர்கள்தான் மீம் கிரியேட்டர்களுக்கு தற்போது கன்டெட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களுடன் கூட்டாக பைக்கில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் சிலர் சாகசக்காரர்கள் போன்று இரு சக்கர வாகனத்தை வளைத்து வளைத்து ஓட்டியதில் இடுப்பு எலும்பு வளைந்ததே மிச்சம் என்ற வகையில் விழுந்து வாரியிருக்கிறார்கள்.

தலைக்கவசம் அணியாது, விதிகளை பின்பற்றாது பைக்கை ஓட்டியதோடு பின்னால் வருபவர்களுக்கும் விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் பைக் சாகசம் செய்து சில்லறைகளை எண்ணிய இளைஞர்களுக்கு வசைவுகளை கொடுக்கவும் தவறவில்லை.

இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாமல் இளைஞர்களின் இந்த விபரீத விளையாட்டை ஒரு உதாரணமாக எடுத்து மற்றவர்களும் இதொ போன்று ஈடுபடாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories