வைரல்

“நம்பினால் நம்புங்கள்.. நான் அங்கு இருந்தேன்..” : மோடியின் வங்கதேச கட்டுக்கதைக்கு ஓவியரின் பதிலடி!

மோடியின் வங்கதேச கட்டுக்கதைக்கு பிரபல ஓவியர் பென்சில் ஆசான் கார்ட்டூன் வெளியிட்டுள்ளார்.

“நம்பினால் நம்புங்கள்.. நான் அங்கு இருந்தேன்..” : மோடியின் வங்கதேச கட்டுக்கதைக்கு ஓவியரின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வங்கதேச விடுதலைக்காக 20 வயதிலேயே போராடி சிறை சென்றதாகவும், வங்கதேச விடுதலைக்கான போராட்டம் மூலமாகவே தனது அரசியல் வாழ்க்கை துவங்கியதாகவும் புதிய தகவல் ஒன்றைக் கூறி பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மோடியிடம் தேநீர் வாங்கிக் குடித்தவர்கள், மோடியுடன் கல்லூரியில் ஒன்றாக - ஒரே டெஸ்க்கில் அமர்ந்து படித்த நண்பர்களையே நாட்டில் இன்னும் கண்டுபிடிக்க முடியாதபோது, வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது மோடியுடன் சிறையில் இருந்தவர்களை எங்கே தேடுவது? என்று சமூகவலைத்தளவாசிகளுக்கு கிறுக்குப் பிடிக்காத குறையாகி விட்டது.

இதையடுத்து, இனியும் மோடியை கேள்வி கேட்பது சரியாக இருக்காது என்று முடிவுகட்டிய அவர்கள், வங்கதேச விடுதலை மட்டுமல்ல, ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் தொட்டு, உலகின் எந்த முக்கிய நிகழ்வும் மோடி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை; அத்தனையிலும் மோடி இருந்திருக்கிறார் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.

தயவுசெய்து புதிதாக எந்தக் கதையையும் மோடி கூறிவிட வேண்டாம் என்று மீம்ஸ் வெளியிட்டுக் கெஞ்சியுள்ளனர். இதையே பிரபல ஓவியர் பென்சில் ஆசான் கார்ட்டூன்களாக வெளியிட்டுள்ளார். இந்த கார்ட்டூன் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- நன்றி தீக்கதிர்.

banner

Related Stories

Related Stories