உலகம்

மோடி வருகையொட்டி வங்கதேசத்தில் வெடித்த கலவரம் : போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

வங்கதேசத்தில், மோடி வருகையையொட்டி பல இடங்களில் தடைமீறி போராட்டங்கள் நடைபெற்றதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

மோடி வருகையொட்டி வங்கதேசத்தில் வெடித்த கலவரம் : போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வங்கதேச விடுதலைப் போரின் 50வது ஆண்டு விழா மற்றும் ‘வங்கதேசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ராகுமானின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

அந்த விழாவில், சிறப்பு அழைப்பாராக இந்திய பிரதமர் மோடி அழைக்கப்பட்டார். பிரதமர் மோடிக்கு அங்கு அழைப்பு விடுத்தே அன்றில் இருந்தே அந்நாட்டில் உள்ள ஹிஃபாஸத் - இ- இஸ்லாம் என்ற அமைப்பு, இந்திய பிரதமர் மோடி மத ரீதியாக பாகுபாடு காட்டுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சொந்த நாட்டில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் Go Back Modi என்ற கோஷம் பின் தொடர்ந்து வரும் வேளையில், நாடு விட்டு நாடுச் சென்றாலும் அந்த சம்பவம் தொடர்வது பா.ஜ.கவினரை சோகம் சூழ்ந்துள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் டாக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் இடதுசாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி வருகையொட்டி வங்கதேசத்தில் வெடித்த கலவரம் : போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

மோடி வருகையையொட்டி பாதுகாப்புக்கள் தீவிரப்பட்டுத்தப்பட்ட நிலையில், பல இடங்களில் தடைமீறி போராட்டங்கள் நடைபெற்றதால், வங்கதேச தலைநகர் டாக்கா, சிட்டகாங், பிரம்மன் பாரியா உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு ரப்பர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தாக்குதலில் தற்போது வரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் இதனால் மக்கள் கோபமடைந்து தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பல இடங்களில் சாலைகளை மூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories