வைரல்

பிபிசி நிருபர் பேசும்போது கேமரா முன்பு விநோத நடனம் ஆடிய சிறுவன்! #ViralVideo

பிபிசி நிருபர் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு தெரியாமல் பின் பக்கமாக வந்து சிறுவன் ஒருவன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிபிசி நிருபர் கேமராவின் முன்பு பேசிக்கொண்டிருந்தபோது அவர் பின்னால் சிறுவன் ஒருவன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர் ஜென் பார்டிராம் லண்டனின் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் உள்ள விண்டி கடற்கரையில் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது கேமரா முன்பு நின்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்குப் பின் பக்கமாக நின்ற சிறுவன் ஒருவன் தான் கேமரா முன்பு இருப்பதை உணர்ந்து நடனம் ஆடத்தொடங்கினான.

அவனுடைய பெயர் லியோ என தகவல் வெளியாகியுள்ளது. அச்சிறுவன் தன்னுடைய சட்டையைத் தூக்கி நெஞ்சு எலும்பு தெரிவதுபோல் உடல் அசைவுகளையும், பின்பு நகைச்சுவையான நடன அசைவுகளையும் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பார்டிராமே தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்து தனக்கு பின்னால் ஒரு சிறுவன் ஆடுகிறான் என்பதை அப்போது தான் கவனிக்கவில்லை என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு பின்னணி இசையையும் சேர்த்து அவர் பதிவிட்டுள்ளார்.

இதுவரை அந்த வீடியோவை கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த வீடியோவுக்கு பல நூறு கமென்ட்களும் குவிந்து வருகின்றன. பலர் தாங்க முடியாத அளவுக்கு சிரிப்பு வருவதாகத் கமென்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories