வைரல்

பாத்ரூம் சிங்கராக உருமாறிய ‘தல’ தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் விளையாடாமல் இருந்தாலும் தனது குறும்புத்தனமான செயல்கள் மூலம் ரசிகர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக கவர்ந்து வருகிறார் எம்.எஸ்.தோனி.

பாத்ரூம் சிங்கராக உருமாறிய ‘தல’ தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தோனி என்ற பெயர் எப்போதுமே மந்திரச்சொல்லாகவே பார்க்கப்படுகிறது. மூன்று வித கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்த வெற்றி கேப்டனாக இருந்தாலும், 2019 உலகக்கோப்பை அரையிறுதி ரன் அவுட் அவரை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களையும் புரட்டிப்போட்டது.

அதனையடுத்து வந்த எந்த கிரிக்கெட் தொடர்களிலும் தோனி விளையாடவில்லை. அதற்கேற்றாற்போல், பி.சி.சி.ஐ-யும் தனது ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயரை நீக்கியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சில மாதங்களாக தோனியின் ஆட்டத்தைக் காணாத ரசிகர்களுக்கு வருகிற மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐ.பி.எல் தொடர் இரட்டிப்பு விருந்தாக அமையவுள்ளது. களத்தில் ஆட எவ்வாறு தோனி தயாராகிறாரோ, அதேபோலத்தான், தோனியின் ஆட்டத்தை மீண்டும் காண ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.

இருப்பினும், தோனி விளையாடாவிட்டாலும், அவரது ஒவ்வொரு செயல்களும் சமூக வலைதளங்களில் எதிரொலித்து வைரலாக பேசப்படுவது வழக்கம். அவ்வகையில், பாத்ரூமில் அமர்ந்து தோனி பாட்டுப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், இந்திய கிரிக்கெட் வீரர்களான பியூஷ் சாவ்லா, பார்த்தீவ் பட்டேல் உள்ளிட்ட சிலருடன் கழிவறையில் அமர்ந்தபடி "mere mehboob qayamat hogi" பாடலைப் பாடி, அதனை சக வீரர்களுக்கும் கற்றுகொடுக்கிறார். இந்தக் காணொளியை, தோனி ரசிகர்கள் அதிகமாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories