இந்தியா

தப்பித்த தோனி... மாட்டிக்கொண்ட சாய்னா நேவால்..! - ஆட்டமும் அரசியலும்!

பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பா.ஜ.கவில் இணைந்தார்.

தப்பித்த தோனி... மாட்டிக்கொண்ட சாய்னா நேவால்..! - ஆட்டமும் அரசியலும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காலூன்றுவதற்காக, அங்கு பிரபலமாக இருப்பவர்களை கட்சிக்குள் இழுக்கும் வேலையை பா.ஜ.க திறம்பட செய்து வருகிறது.

அந்த வகையில், கிரிக்கெட் வீரர் கம்பீர், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பா.ஜ.கவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

தப்பித்த தோனி... மாட்டிக்கொண்ட சாய்னா நேவால்..! - ஆட்டமும் அரசியலும்!

இந்நிலையில், பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவுக்காக பேட்மின்டன் விளையாட்டில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது திட்டங்களையும் அடிக்கடி பாராட்டி கருத்துகளையும் பதிவிட்டு வந்த சாய்னா நேவால் இன்று டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தப்பித்த தோனி... மாட்டிக்கொண்ட சாய்னா நேவால்..! - ஆட்டமும் அரசியலும்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் தோனியை ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு தோனி மறுத்திருந்தார். அதேபோல பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் தோனி மறுத்திருந்தார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, அதற்கு பழிவாங்கும் விதமாக தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டும் விதத்தில் பா.ஜ.க செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories