விளையாட்டு

IPL 2020 அட்டவணை: தெறிக்கவிடும் தொடக்க போட்டி; 8 மாதத்திற்கு பிறகு களமிறங்கும் தோனி..ரசிகர்கள் ஆரவாராம்!

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே சி.எஸ்.கே-மும்பை இந்தியன்ஸ் மோதவுள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

IPL 2020 அட்டவணை: தெறிக்கவிடும்  தொடக்க போட்டி; 8 மாதத்திற்கு பிறகு களமிறங்கும் தோனி..ரசிகர்கள் ஆரவாராம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

13வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 29ஆம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போட்டி அட்டவணைகள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தொடக்க போட்டி எந்த இரு அணிகளுக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது லீக் போட்டிக்கான அட்டவணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி இவ்விரு அணிகள் மோதும் போட்டி, தொடக்க விழா என விழாக்கோலம் பூண்டவுள்ளது மும்பை நகரம். முதல் போட்டியே அனல் பறக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி மழையில் திளைத்துள்ளனர்.

IPL 2020 அட்டவணை: தெறிக்கவிடும்  தொடக்க போட்டி; 8 மாதத்திற்கு பிறகு களமிறங்கும் தோனி..ரசிகர்கள் ஆரவாராம்!

ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை மும்பை-சென்னை அணிகள் இடையேயான போட்டி இந்தியா-பாகிஸ்தான் அளவிற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, கொண்டாடப்படவும் செய்வர். இரு அணிகள் மோதும் போட்டி என்றால் வீரர்கள், ரசிகர்கள், நடுவர்கள் என அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியும், ஆர்ப்பரிப்புமே மைதானம் முழுவதும் நிறைந்திருக்கும்.

எதிர்பார்க்கும் மவுசுக்கு ஏற்றாற்போல், இரு அணி வீரர்களும் களத்தில் தீயாக விளையாடுவதால் கடைசி ஓவர் வரை இருக்கையின் நுணியில் ரசிகர்களை அமர வைத்திருப்பர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் மும்பை-சென்னை அணிகள் மோதியதில், வெறும் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை மும்பையிடம் பறிகொடுத்தது. த்ரில்லிங் வெற்றியை மும்பை அணி கொண்டாடிய தருணம், ரசிகர்களிடம் நினைவிருக்கும்.

IPL 2020 அட்டவணை: தெறிக்கவிடும்  தொடக்க போட்டி; 8 மாதத்திற்கு பிறகு களமிறங்கும் தோனி..ரசிகர்கள் ஆரவாராம்!

ஆகையால் கடந்த சீசனில் ஏற்பட்ட தோல்விக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்போடு தொடக்க வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தீயாய் காத்திருக்கிறார்கள். அதேபோல், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வெற்றியை போல், இந்த முறை தொடக்க ஆட்டமும் மும்பை இந்தியன்ஸ் வசமே என்ற கெத்தான வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதை தாண்டி, சென்னை ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் உச்சகட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. காரணம், உலகக்கோப்பைக்கு பிறகு களத்தில் தோனியை பார்க்காத ஏக்கம் என்றே சொல்லலாம்.

சுமார் 8 மாதங்களாக தோனியை களத்தில் பார்க்காத ரசிகர்களுக்கு இந்த ஐ.பி.எல் தொடர் இரட்டிப்பு விருந்துதான். களத்தில் தோனியை மீண்டும் இந்திய ஜெர்சியில் பார்க்க இருந்தவர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் பார்க்க உள்ளனர். தோனியின் கம்பேக், களத்தில் தோனியின் ஆட்டம், என ஒட்டுமொத்தமாக ரசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ஐ.பி.எல் உச்சகட்ட கொண்டாட்டமாக அமையும்.

போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டதை ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்கள், ஒரு தகுதிச்சுற்று என மொத்தம் 8 ஆட்டங்கள் ரசிகர்களை ரன் மழையில் நனைய வைக்க காத்திருக்கிறது. தொடக்க போட்டி அரங்கேறும் வான்கடே மைதானத்திலேயே மே 24ஆம் தேதி நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியும் அரங்கேறவுள்ளது.

போட்டி தொடங்கும் நாளான மார்ச் 29ஆம் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, நிதி திரட்டும் நோக்கில் நட்சத்திர வீரர்களின் போட்டி நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories