வைரல்

செல்ஃபி மோகத்தால் செல்ஃபோனை இழந்த இளம்பெண்கள் : பஞ்சாபில் நடந்த நூதன திருட்டு! (வைரல் வீடியோ)

நடுரோட்டில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த பெண்களிடம் இருந்து லாவகமாக செல்ஃபோனை பறித்துச் சென்றுள்ளார் ஒருவர்.

செல்ஃபி மோகத்தால் செல்ஃபோனை இழந்த இளம்பெண்கள் : பஞ்சாபில் நடந்த நூதன திருட்டு! (வைரல் வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்ஃபி எடுக்க ஆரம்பித்துவிட்டால் அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட கண்டுகொள்ளாமல் படுசுவாரஸ்யத்தில் மூழ்கி விடுகின்றனர்.

சமயங்களில், இதுபோன்ற செல்ஃபி மோகத்தால் உயிரைக்கூட இழக்க நேரிடும் சூழல் ஏற்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் இதுபோன்று செல்ஃபி எடுக்கும்போது நூதன முறையில் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

செல்ஃபி மோகத்தால் செல்ஃபோனை இழந்த இளம்பெண்கள் : பஞ்சாபில் நடந்த நூதன திருட்டு! (வைரல் வீடியோ)

ஜலந்தரின் பிரதான சாலை ஒன்றில் விலையுயர்ந்த காரின் முன்பு அதன் பேனட்டில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்த இரு இளம்பெண்கள் கார் தெரியும் அளவுக்கு கையை மேலே உயர்த்தி செல்ஃபி எடுத்துள்ளனர்.

இந்த போட்டோ எடுக்கும் படலம் சில நிமிடங்களுக்கு தொடர்ந்திருக்கிறது. சாலையை பார்த்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்ததால் அவ்வழியே பைக்கில் வந்தவருக்கு அது சாதகமாகிவிட்டது.

சடாரென பைக்கில் வந்தபடி, இளம்பெண்களின் கையில் இருந்த செல்ஃபோனை லாவகமாக பறித்துச் சென்றிருக்கிறார். பின்னர் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் அந்த நபரை துரத்தி ஓடிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த மர்ம நபர் பிடிபடவில்லை.

கடந்த மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தாலும், தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories