வைரல்

சோதனையில் இருந்து தப்பிக்க டிராஃபிக் போலிஸை 2 கி.மீ தொலைவுக்கு இழுத்துச்சென்ற கார் டிரைவர்- வைரல் வீடியோ!

டெல்லியில் ஆவணங்களை காட்டச் சொன்ன போலிஸ் 2 கிலோ மீட்டருக்கு கார் பேனட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோதனையில் இருந்து தப்பிக்க டிராஃபிக் போலிஸை 2 கி.மீ தொலைவுக்கு இழுத்துச்சென்ற கார் டிரைவர்- வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக வாகனம் ஓட்டி பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் காவல்துறை சார்பில் கடுமையான அபராதங்களை விதித்தும், பல வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் விபத்துகளை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், விதிமீறல்களை போக்குவரத்து காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத சூழலே நிலவுகிறது.

இந்நிலையில், டெல்லியின் நாங்கோலி பகுதியில் வாகன சோதனையின் போது தப்பிக்க முயன்ற நபர், சுனில் என்கிற போக்குவரத்து போலிஸாரை 2 கி.மீ தொலைவுக்கு காரின் பேனட்டில் இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

இது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றிருந்தாலும், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அதில், சோதனையின் போது ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்த போலிஸார் சுனில் வேறொரு வழியில் ஒரு கார் மெதுவாகச் சென்றதை கண்டுள்ளார். அந்தக் காரை ஓட்டியவர் நிறுத்தாமல் சென்றதால் அந்த கார் மீது எகிறி குதித்து காரை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

இருப்பினும், காரை நிறுத்தாமல் இயக்கியுள்ளார் அந்த நபர், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு காரின் பேனட்டில் கிடந்த சுனில், காரை நிறுத்தும்படி கோரியும் நிற்காமல் சென்றிருக்கிறார். வேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுநர் ஒருகட்டத்தில் சாலையோரத்தில் நிறுத்தி அவரை இறக்கிவிட்டுள்ளார்.

இந்தக் காட்சி அனைத்தையும், காரில் இருந்த சக பயணி வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவே தற்போது வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் காவலர் சுனில் படுகாயமடைந்திருக்கிறார்.

சோதனையில் இருந்து தப்பிக்க டிராஃபிக் போலிஸை 2 கி.மீ தொலைவுக்கு இழுத்துச்சென்ற கார் டிரைவர்- வைரல் வீடியோ!

பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. 2 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த சம்பவம் தொடர்பான எந்த விசாரணையிலும் போலிஸார் ஈடுபடாமல் இருந்தது இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் டெல்லி போலிஸார் மீது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், துணிச்சலாக அந்த காரை மறிக்க முயற்சித்த போலிஸார் சுனிலுக்கு அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories