வைரல்

கொரோனா: இக்கட்டான சூழலில் இருக்கிறோம்.. இப்படியா வருவது? சீன மக்களை எச்சரிக்க புது உத்தி - வைரல் வீடியோ!

சீனாவில் மாஸ்க் அணியாமல் நடமாடும் மக்களை எச்சரிக்கும் விதமாக புதுமையான உத்தியை கையாண்டுள்ளது அந்நாட்டு அரசு.

கொரோனா: இக்கட்டான சூழலில் இருக்கிறோம்.. இப்படியா  வருவது? சீன மக்களை எச்சரிக்க புது உத்தி - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 300க்கும் மேலானோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக மருத்துவமனையையும் கட்டி சாதித்துள்ள சீன அரசு, வைரஸ் தொற்று இதர மக்களுக்கும் பரவாமல் தடுக்கும் வகையில் மாஸ்க் அணிவது, உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது என அறிவுறுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நாட்டு மக்கள் அனைவரையும் உஷார் படுத்துவதற்காக வானில் ட்ரோன்களை பறக்கவிட்டு அதன் மூலமும் மக்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாஸ்க் அணியாமல் பொது வெளியில் செல்பவர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களை வீட்டுக்குச் செல்லும்படி ட்ரோன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், “நான் தான் ட்ரோன் பேசுகிறேன். மாஸ்க் அணியாமல் நீங்கள் வெளியே வந்திருக்கவே கூடாது. பாதுகாப்பாக இருக்க உடனே வீட்டுக்குச் செல்லுங்கள். வீட்டிற்கு சென்றதும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்” என மூதாட்டி ஒருவரிடம் பேசுகிறது அந்த ட்ரோன்.

அதுபோல, அடர்ந்த பனிப் பகுதியில் இருந்துக்கும் மற்றொரு நபரிடம், “நாம் இப்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். எதற்காக நீங்கள் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறீர்கள். அத்தியாவசிய தேவை என்று எதுவும் இல்லாமல் இருக்கும் போது வெளியே வராதீர்கள்.” என கூறியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள மக்களிடமும் இதேபோல் மாஸ்க் அணியும் படி அறிவுறுத்தி, அநாவசியமாக பொதுவெளியில் நடமாடுவதை தவிர்க்கச்சொல்லி கூறி வருகிறது. இது அந்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதோடு, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories