உலகம்

கொரோனா வைரஸ் எதிரொலி: எட்டே நாட்களில் பிரத்யேக மருத்துவமனையை கட்டிய சீனா- வைரலாகும் வீடியோ!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சீன அரசால் கட்டப்படும் மருத்துவமனை கட்டடம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராலக பரவி வருகின்றது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவை அச்சமூட்டிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பினால் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல துரித நடவடிக்கைகளை எடுத்து வரும் சீனா வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் நிலையில், அண்டை நாடுகளும் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதுமட்டுமின்றி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு சிறப்பு மருத்துவமனை ஒன்றை கட்டிவருகிறது. 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை நாளை திறக்கவுள்ளது. 8 நாட்களுக்குள் கட்டிமுடிக்கவேண்டும் என்பதற்காக இரவு பகலாக பணிகள் நடந்துவருகிறது.

இந்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 14,000 ஆயிரம் ராணுவ மருத்துவர்களை அனுப்ப சீன அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவமனை கட்டம் கட்டப்படுவது தொடர்பாக வீடியோ ஒன்றை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலக பரவி வருகின்றது.

banner