சினிமா

போதைப் பொருள் வழக்கு... நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றத்தின் நிபந்தனை என்ன ?

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்கு... நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றத்தின் நிபந்தனை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் நிா்வாகி பிரசாத் மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் ஆஜரானாா். அவரிடம் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து விடியவிடிய விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் வழக்கு... நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றத்தின் நிபந்தனை என்ன ?
The Week

இதனிடையே நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கைதானவர்களுடன் நடிகர் கிருஷ்ணா செல்போன் உரையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கிருஷ்ணாவும் கைதானவர்களும் கோட் வேர்டு மூலம் பேசிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்யப்பட்டனர் என்றாலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories