வைரல்

உடல் பருமனை குறைக்க உதவும் ‘சூரிய முத்திரை’ | நலம் நலம் அறிக ! (Video)

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி பருமனைக் குறைக்க உதவும் சூரிய முத்திரை செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனை குறைக்க உதவும் ‘சூரிய முத்திரை’ | நலம் நலம் அறிக ! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உடல் எடையை கட்டுக்குள் வைத்தாலே நம் உடலில் உள்ள பெரும்பாலான நோய்கள் அகலும். நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும். ஆனால் நம்மில் பலர் உடல் எடை அதிகரித்தால் கவலையுறாமல் எளிதாக துணிகளின் அளவை மட்டும் மாற்றிக்கொள்கின்றனர்.

அதேசமயம் உடல் எடை அதிகரிப்பை உணர்ந்தால் மருத்துவரை ஆலோசிக்காமல் உடனடியாக எடையைக் குறைக்கும் மருந்துகளை உட்கொண்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் சந்திக்கின்றனர். சீரான ஆரோக்கியமாக இல்லாமல் கேடான செயல்முறைகளையே பலரும் நாடிச் செல்கின்றனர்.

உடல் பருமனை குறைக்க உதவும் ‘சூரிய முத்திரை’ | நலம் நலம் அறிக ! (Video)

செரிமானம் ஆகாத உணவுகளை உட்கொள்ளுதல், நேரம் தவறி உண்ணுதல் போன்றவற்றாலேயே உடலின் எடை வெகுவாக அதிகரிக்கிறது. இதனால் கெட்ட கொழுப்பு உண்டாகி உடலை சோர்வாகவே வைத்திருக்கிறது. ஆகவே இதற்கெல்லாம் நிவாரணியாக வெறும் முத்திரைகளை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க முடியும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, உடல் பருமனை குறைப்பதற்கு பெரும் உதவியாக இருப்பது ‘சூரிய முத்திரை’. இந்த முத்திரையை செய்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து ஜீரண சக்தி அதிகமாகும். தைராய்டு, தலைவலி, குளிர் காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க சூரிய முத்திரை உதவும்.

இந்த சூரிய முத்திரையை உஷ்ணம் கொண்டவர்கள், கல் அடைப்பு, நீர்க்கடுப்பு, வாய்ப்புண் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், சூரிய முத்திரை செய்து முடித்ததும் உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட வேண்டும்.

கோடை காலத்தில் தினமும் ஒருமுறை 5 நிமிடங்களும், மற்ற பருவகாலங்களில் 5-20 நிமிடங்கள் வரையும் இந்த முத்திரையை செய்து வரலாம். உடல் எடை குறைந்து, கொலஸ்ட்ரால் குறைந்ததும் இந்த முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

banner

Related Stories

Related Stories