வைரல்

பருவ வயது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டிய மான் முத்திரை - நலம் நலம் அறிக ! (வீடியோ)

மலச்சிக்கல், வலிப்பு, மனசோர்வு இவற்றுக்கெல்லாம் நிவாரணியாக இருக்கும் மான் முத்திரையை செய்வது எப்படி என்பதை காணலாம்.

பருவ வயது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டிய மான் முத்திரை - நலம் நலம் அறிக ! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குழந்தைகள் பருவ வயதை அடையும் போது பொதுவாக எல்லா பெற்றோர்களும் “என் பிள்ளைங்க நான் சொல்றத கேட்கவே மாட்டேங்குறாங்க, சிடு சிடுனு இருக்காங்க, எரிச்சலா இருக்காங்க” என புலம்புவது வழக்கம்.

அதேபோல, பருவ வயதில் உள்ள பெண்களும், ஆண்களும் அதீத சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். விவேகமே இல்லாமல் வேகமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடுவார்கள்.

பருவ வயது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டிய மான் முத்திரை - நலம் நலம் அறிக ! (வீடியோ)

இது போன்ற செயல்பாடுகளில் இருந்து குழந்தைகளை தடுப்பதற்கு எளிய முறையாக சித்த மருத்துவத்தில் மான் முத்திரையின் மூலம் கையாளப் படுகிறது.

இந்த மான் முத்திரையை பெற்றோர், குழந்தைகள் என அனைத்து வயதினரும் செய்யக்கூடிய ஒன்றுதான் என கூறுகிறார் வர்ம மற்றும் சித்த மருத்துவர் கல்பனா தேவி.

தினந்தோறும், காலை இரவு என தலா 20 நிமிடங்கள் இந்த மான் முத்திரையை செய்து வந்தால் மன அழுத்தத்தால் ஏற்படும் மலச்சிக்கல் சீராகும்.

வலிப்பு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த மான் முத்திரையையும் உடன் செய்து வந்தால் நன்மை பயக்கும். பற்களில் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகள் சீராகும்.

பிரச்னையே இல்லாவற்றுக்கெல்லாம் கோபமடைபவர்கள், மன சோர்வு கொள்பவர்கள் இந்த மான் முத்திரையை தினந்தோறும் 10 முதல் 40 நிமிடங்களுக்கு செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என மருத்துவர் கூறுகிறார்.

banner

Related Stories

Related Stories