வைரல்

லேசா மிரட்டினாலே, முஸ்லிம்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுவாங்க - இதுவே மோடியின் சாதனை : பா.ஜ.க பிரமுகர் ட்வீட்

முஸ்லிம் இளைஞரை ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லி வற்புறுத்தியதை வெளிப்படையாகப் பதிவிட்டுள்ள பா.ஜ.க பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

லேசா மிரட்டினாலே, முஸ்லிம்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுவாங்க - இதுவே மோடியின் சாதனை : பா.ஜ.க பிரமுகர் ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகின்றன.

கடந்த மாதங்களில் ஜார்கண்ட்டில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீராம்' எனக் கூறச் சொல்லி ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்ததில் அவர் மயக்கமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீஸ் முகமது சஹ்ருக் ஹல்தார் என்ற இஸ்லாமிய மதபோதகர், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இந்துத்துவா கும்பல் 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கமிடுமாறு கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் ரயிலில் இருந்து அந்த கும்பல் அவரைத் தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டது.

இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க-வினர் முஸ்லிம் மக்கள் மீது நடத்திய தாக்குதல் அதிகம். இப்படி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடும் கும்பலை மோடி அரசு கொண்டுகொள்ளாமல் செயல்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியும், பா.ஜ.க ஆதரவாளருமான கல்யாண ராமன் என்பவர் அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞரை ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி வற்புறுத்தியதை பெருமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கல்யாண ராமன் தெரிவித்துள்ளதாவது, “நேற்று அகமதாபாத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். ரோட்டில் போய்க்கொண்டு இருந்த ஒரு முஸ்லீமை அழைத்து ஜெய்ஸ்ரீராம் சொல்லு என்றவுடன் கூறினான். ஜெயமாதாதி என்று சொல் என பணித்தனர். ஒரு தயக்கம்கூட இல்லாமல் அழகா சொல்லிட்டு நகர்தான் அந்த ஆள். 2002 கோத்ரா. மோடிமேஜிக் கண்டு வியந்தேன்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நேற்று அகமதாபாத்தில் கண்ட நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆவல்” என்றும் பதிவிட்டுள்ளார் அவர்.

அவர் சொன்ன தகவல் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், இப்படி மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதமோதல்களை உண்டாக்கும் சதிவேலையைச் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக, முஸ்லிம் மக்கள் மனம் புண்படும்படி தரக்குறைவாகப் பேசிய குற்றத்திற்காக இவர் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories