வைரல்

கடற்கரையில் தாயுடன் போஸ் கொடுக்கும் குழந்தை... சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோவில் இருப்பது யார்?  

கடலோரத்தில் சிறுவயதில் தனது தாயுடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் நடிகையின் படம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

கடற்கரையில் தாயுடன் போஸ் கொடுக்கும் குழந்தை... சமூக வலைதளங்களில்  வைரலாகும் போட்டோவில் இருப்பது யார்?  
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தென்னிந்தியாவின் பரபரப்பான திரைப்பட நட்சத்திரத்தின் படம்தான் அது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சினிமா ரசிகர்களின் மனங்கவர்ந்த சாய் பல்லவியே அந்த குழந்தை.

இந்த படத்தை சாய் பல்லவி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சாய் பல்லவியின் தாய் படத்தில் இருக்கிறார். 'ஐ லவ் யூ' அம்மா எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார் சாய் பல்லவி.

View this post on Instagram

I love you ma ♥️

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai) on

‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர். அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து, முதல் படத்திலேயே தென்னிந்திய சினிமா ரசிகர்களின், இளவட்டங்களின் இதயத்தைக் கவர்ந்தவர் சாய் பல்லவி.

தமிழில் நடிகர் தனுஷ் உடன் அராத்து ஆனந்தியாக நடித்து ‘க்யூட் பேபி’ என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

கடற்கரையில் தாயுடன் போஸ் கொடுக்கும் குழந்தை... சமூக வலைதளங்களில்  வைரலாகும் போட்டோவில் இருப்பது யார்?  

இப்போது அவர் பதிவிட்டுள்ள சிறுவயது குழந்தை படத்தை ரசிகர்கள் தங்கள் இணையப் பக்கங்களில் மறுபதிவிட்டு ‘க்யூட் பேபி’யை கொண்டாடி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories