தமிழ்நாடு

பெண்களைக் குறிவைத்து ஆபாசத் தாக்குதல்.. AI மூலம் வக்கிரப் பிரச்சாரம்: கொதித்தெழுந்த மேயர் பிரியா!

ஊருக்கெல்லாம் ஒழுக்கப்பாடம் எடுக்கும் விஜய் கட்சி எம்.எல்.ஏக்களின் ஒழுக்கக்கேடைப் பார்த்து ஊரே சிரிக்கிறது, Vulgar warriors வக்கிரத்தைப் பார்த்து தமிழ்நாடே காறியுமிழ்கிறது.

பெண்களைக் குறிவைத்து ஆபாசத் தாக்குதல்.. AI மூலம் வக்கிரப் பிரச்சாரம்: கொதித்தெழுந்த மேயர் பிரியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அக்கட்சியினரின் இணையவழிப் பிரச்சாரத்தை ஊக்குவிக்கவும், மற்ற கட்சியினருக்கு எதிராகச் செயல்படவும் 'விர்சுவல் வாரியர்ஸ்' என்ற பெயரைச் சூட்டி, தனது தொண்டர்களை விஜய் உசுப்பேற்றினார். இதன் விளைவாக, அரசியல் புரிதலோ, கடந்தகால அரசியல் வரலாறு குறித்த அறிவோ இல்லாமல், ஆபாசத் தாக்குதல்களையும் அவதூறுக் கருத்துகளையும் தவெகவினர் இணையவழியில் பரப்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஆட்சிக்கு வந்த பின்னரும் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கத் திராணியின்றி, முழுக்க முழுக்க ஆபாசத் தாக்குதல்களில் விர்சுவல் வாரியர்ஸ் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இவர்களின் செயல்பாடுகளால் பலரும் மனவேதனை அடைந்து சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பலரும் தவெகவின் விர்சுவல் வாரியர்ஸை 'அப்யூஸ் வாரியர்ஸ்' என்று கடுமையாக விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்களைக் குறிவைத்து ஆபாசத் தாக்குதல்.. AI மூலம் வக்கிரப் பிரச்சாரம்: கொதித்தெழுந்த மேயர் பிரியா!

இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, தவெக ஆட்சிக்கு வந்தது முதல் குறிப்பாகப் பெண்கள் மீது தொடுக்கப்படும் ஆபாசத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், மாநிலத்தின் தலைநகரான சென்னையின் மேயர் பிரியா மீது தொடர்ந்து அருவருக்கத்தக்க வகையில் ஆபாசக் கருத்துகளைப் பதிவிடுவதுடன், AI இமேஜ்களைப் பயன்படுத்தியும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மேயர் பிரியா தனது முகநூல் பதிவில், “இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாகப் பலமுறை என்னைக் குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இதுகுறித்தும் வாயே திறப்பதில்லை.

பெண்களைக் குறிவைத்து ஆபாசத் தாக்குதல்.. AI மூலம் வக்கிரப் பிரச்சாரம்: கொதித்தெழுந்த மேயர் பிரியா!

அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி, ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இதுபோன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted Abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல். இவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியாவின் இந்தப் பதிவைச் சுட்டிக்காட்டி திமுக மகளிர் அணி வெளியிட்டுள்ள பதிலில், “தவெகவினரின் சிந்தனை எவ்வளவு ஆபாசமும் வக்கிரமும் நிறைந்தது என்பதற்கு இது ஒரு சாட்சிதான். ஆன்லைன் அப்யூசர்களால் (Online Abusers) நிறைந்த ஆபாச வெறிபிடித்த கும்பல்தான் தவெக. எம்.எல்.ஏ. முதல் உறுப்பினர் வரை பொறுக்கிகளைத் தேடிப்பிடித்துக் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.

பெண்களைக் குறிவைத்து ஆபாசத் தாக்குதல்.. AI மூலம் வக்கிரப் பிரச்சாரம்: கொதித்தெழுந்த மேயர் பிரியா!

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மறைந்த தலைவரை இழிவுபடுத்தும் தவெகவின் மலினப் புத்திக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சமூகப் பணியாற்றும் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க, சாதி வெறிக்கும் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் திமுக இளைஞர் அணி வெளியிட்டுள்ள பதிவில், “பி கிரேடு திரைப்பட நாயகனாகத் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, தன் திரைப்படங்களில் பெண்களை இழிவாக சித்திரித்து, தன் போட்டி நாயகர்களின் குடும்பப்பெண்களை இழிவாக வசைபாட ஊக்குவித்தவர்தான் இன்றைய முதலமைச்சர் விஜய். அதே ஆபாசப்பணியை அரசியலிலும் தொடர்ந்துகொண்டே மற்றவர்களுக்கு ஆபாச முத்திரை குத்தப் பார்ப்பது வினோதம். ஊருக்கெல்லாம் ஒழுக்கப்பாடம் எடுக்கும் விஜய் கட்சி எம்.எல்.ஏக்களின் ஒழுக்கக்கேடைப் பார்த்து ஊரே சிரிக்கிறது, Vulgar warriors வக்கிரத்தைப் பார்த்து தமிழ்நாடே காறியுமிழ்கிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் முழங்கும் விஜய், தனது கட்சியினரால் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories