அரசியல்

“கோமாளி அரசுக்கு... சம்மட்டி அடி கொடுப்பதே சரியான வழி!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!

அரசியலமைப்பு நாள் - சட்டம் கொடுத்த உரிமையை காலில் போட்டு மிதிக்கும் அரசு!

“கோமாளி அரசுக்கு... சம்மட்டி அடி கொடுப்பதே சரியான வழி!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் வகையில், அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்பைப் போற்றும் விதமாக, இன்று (நவ.26) நாடு முழுவதும் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில், தமிழ்நாட்டைக் கடந்த 6 மாதங்களாகச் சீரழித்து வரும் த.வெ.க. ஆட்சியின் அவலத்தை எடுத்துரைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு;

இன்று இந்திய அரசியலமைப்பு நாள். அண்ணல் அம்பேத்கர் நமக்குத் தந்த சமத்துவம் (பிரிவு 14), பேச்சுரிமை (பிரிவு 19), உயிர் வாழும் உரிமை (பிரிவு 21) ஆகிய மூன்றையும் ஆறே மாதத்தில் குழிதோண்டிப் புதைத்திருக்கிறது விஜய்யின் ஜனநாயக விரோத அரசு!

பேச்சுரிமையா? - ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில், முதலமைச்சரையும் அமைச்சர்களையும் விமர்சித்ததற்காகக் குறைந்தது 10 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக, ‘தி இந்து’ நாளிதழே தலையங்கம் எழுதியது.

‘த.வெ.க எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் பேசியதாக’ தொடரப்பட்ட பொய் வழக்கில் ‘புதிய தலைமுறை’ ஊடகவியலாளர் விஜயன் அவர்களின் செல்போனைப் பறித்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தியது.

“கோமாளி அரசுக்கு... சம்மட்டி அடி கொடுப்பதே சரியான வழி!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!

வரலாறு காணாத விலைவாசி உயர்வை சுட்டிக்காட்டினார் பொருளாதார அறிஞர் பேராசிரியர் கலையரசன் அவர்கள். போலிக் கணக்கின் பதிவைக் காரணம் காட்டி, அவரை விடியற்காலை 5 மணிக்கு சீருடை அணியாத காவல்துறையினர் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்தனர்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடும் கண்டனத்துக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் பேராசியர் கலையரசனை அழைத்து மன்னிப்பு கேட்டார். த.வெ.க அரசின் கருத்து சுதந்திர மீறல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் அவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தார்.

உயிர் வாழும் உரிமையா? - ஆறு மாதங்களில் குறைந்தது 9 காவல் மற்றும் சிறைக் காவல் மரணங்கள்! நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உடலில் 19 காயங்கள்! மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்தார்.

முதலமைச்சர் வாய் திறந்தாரா? திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தி “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கேட்ட வாய்க்கு சொந்தக்காரர்தான், சாரியும் கேட்காத, நீதியும் வழங்காத இன்றைய மௌன சாமியார் முதல்வர்.

போராட்ட உரிமையா? - நீட் எதிர்ப்பை வலியுறுத்திய மாணவர்களைக் கைது செய்துவிட்டு, “சாலைகள் போராட்டத்துக்கானவை அல்ல” என்கிறார் அமைச்சர். தேசிய பத்திரிகை தினத்துக்கு மறுநாளே, முதலமைச்சர் நிகழ்ச்சியைச் செய்தியாக்க வந்த நிருபர்களை விரட்டியடித்தது போலீஸ். சென்னை பத்திரிகையாளர் மன்றமே இதைக் கண்டித்தது!

பெண்ணின் கண்ணியமா? - ஜூலை 31-லேயே அரசுக்குத் தெரிந்திருந்தும், ஒரு பெண் ஆட்சியரின் புகாரில் தவெக எம்எல்ஏ மீது நான்கு மாதம் கழித்தே எஃப்ஐஆர் பதிவானது. “நீங்கள் யாரையாவது காப்பாற்றுகிறீர்கள் என்று சிறு அறிகுறி கிடைத்தாலும்...” என்று நீதிபதி லட்சுமிநாராயணன் எச்சரிக்கும் நிலைக்குத் தள்ளியது இந்தப் பாலியல் வெற்றிக்கழக அரசு!

விமர்சித்தால் கைது, போராடினால் கைது, காவலில் மரணம், பெண்ணுக்கு அநீதி. இதுதான் நீங்கள் சொன்ன “மாற்றமா”? இதில் கொள்கைத் தலைவர் என்று அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அரசியலமைப்பைவிட உங்கள் அதிகார ஆணவம் பெரிதா?

அரசியலமைப்பை மிதிக்கும் கோமாளி அரசுக்கு ஜனநாயக ரீதியில் சம்மட்டி அடி கொடுப்பதே சரியான வழி!!!

banner

Related Stories

Related Stories