அரசியல்

காங்கிரஸுக்கு இடமில்லையா? - 5 வேட்பாளர்களை அறிவித்து அகிலேஷ் அதிரடி!

கூட்டணிப் பேச்சு ஒருபுறம்; வேட்பாளர் அறிவிப்பு மறுபுறம் என காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த அகிலேஷ்.

காங்கிரஸுக்கு இடமில்லையா? - 5 வேட்பாளர்களை அறிவித்து அகிலேஷ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

உத்தரப்பிரதேசத்தில் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடத் திட்டமிட்டு வரும் நிலையில், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் -சமாஜ்வாதி கட்சிகளுக்கும் இடையே மோதல் உருவாகியிருக்கிறது.

காங்கிரஸ் தரப்பில் 130 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியல் சமாஜ்வாதி கட்சியிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தரப்பில் காங்கிரஸுக்கு முதற்கட்டமாக 26 தொகுதிகள் ஒதுக்க முன்வந்தந்தாக தகவல்கள் வெளியானது.

இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அவித்து, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸுக்கு இடமில்லையா? - 5 வேட்பாளர்களை அறிவித்து அகிலேஷ் அதிரடி!

அதன்படி பெஹெட் தொகுதியில் உமர் அலி கான், சஹாரன்பூர் தொகுதியில் ஆஷு மாலிக், கைரானா தொகுதியில் நாஹித் ஹசன், அம்ரோஹா தொகுதியில் மெஹபூப் அலி, லலித்பூர் தொகுதியில் ஜோதி லோதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், பெஹாட், சஹாரன்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் தனது விருப்ப பட்டியலில் இடம் பெறச் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சஹாரன்பூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத், இந்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கூட்டணிக் கட்சிகள் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டு விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது, கூட்டணிக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துமா? அல்லது மேலும் விரிசலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை கூட்டாக எதிர்கொள்ள நினைக்கும் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு, தொகுதிப் பங்கீடே, முதல் அரசியல் சவாலாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories