தமிழ்நாடு

“முதலில் Rest-ஐ விட்டுவிட்டு காவல் துறையை கையில் எடுங்கள்”: விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?

“முதலில் Rest-ஐ விட்டுவிட்டு காவல் துறையை கையில் எடுங்கள்”: விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க ஆட்சியின் அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-

சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது.

🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது.

🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள்.

🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது.

🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.

🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா?

🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?

🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும்.

🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?

🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?

🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன.

🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories