
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த 5 மாதங்களில் போதைப் புழக்கம் புது உச்சத்தை அடைந்துள்ளது. அதிலும், குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தப்பட்டு வந்த போதைப் பொருட்கள் எல்லாம், தற்போது தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
அதிலும், கூடுதல் அதிர்ச்சியளிக்கும் வகையில், இக்கடத்தலை ஆளும் த.வெ.க.வின் உறுப்பினரே செய்துள்ளது மக்களிடையே பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு பின்வருமாறு,
“நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை எப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா?

த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற பின்னர் பல நூறு கோடி மதிப்பிலான ‘International Drug Mafia’-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன?
137 கிலோ 'மெத்' போதைப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த ‘Financier’ யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்?
கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போதை மாஃபியாக்களுக்கும், த.வெ.க கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா?
என்பதைக் கண்டறிய ஒன்றிய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!”






