
நாகை மாவட்டம், சிந்தாமணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்த சூழலில் இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில், பூபாலன் மற்றும் அவரது நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் ஆகியோரது வீடுகளில் 5 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமான DRI அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.
நேற்றைய முன்தினம் (அக்.16) சுமார் 8 மணி நேரமாக இவரது வீட்டில் DRI நடத்திய சோதனையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் சுகன் உள்ளிட்ட 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சட்டம் ஒழுங்கு பற்றியும், போதை கலாச்சாரம் பற்றியும் வாய்கிழிய முதலமைச்சர் விஜய் பேசி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகியே அதுவும் தனது சொந்த வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்துக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :-
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உச்சத்தை தொட்டுள்ளது என்று உலகே பேசுவதை அறிவீர்களா CM sir ?தமிழகம் இதுவரை அறிந்திராத சர்வதேச போதை வஸ்துக்களை உங்கள் ஆசிர்வாதத்தோடு உங்கள் நிர்வாகிகள் பகிரங்கமாக விற்பதும், காவல்துறையினர் அதை கண்டும் காணாமல் இருப்பதும் இன்னும் எத்தனை நாள் தொடரும் CM sir ?
135 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற உங்கள் கட்சி நிர்வாகி பூபாலனுக்கு, இவ்வளவு போதை பொருள் எங்கிருந்து யார் மூலம் வந்தது? இதற்கு முன்பு அவர் எந்தெந்த நாடுகளுக்கு கடத்தியுள்ளார்? போதைப் பொருள் கடத்தலுக்கும் உங்கள் கட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கம் தர தயாரா CM sir ?

30 ஆண்டுகளாக திரையுலகில் ஆபாசத்தையும், வன்முறையும் பரப்பி இளைஞர் சமுதாயத்தை கெடுத்து வந்த நீங்கள், ஆட்சிக்கு வந்த பின்பு நேரடியாக போதை வஸ்துக்களுக்கு இளைஞர், மாணவ-மாணவிகள் சமுதாயத்தை அடிமையாக்கி வருகிறீர்களே உங்களை தமிழ்நாட்டின் பெற்றோர்கள் மன்னிப்பார்களா CM sir?
வெள்ளிக்கிழமை மதியம் பனையூர் பங்களாவுக்கு செல்லும் நீங்கள் திங்கள்கிழமை வரை நீண்ட ஓய்வில் இருப்பதோடு கோட்டைக்கு வரும் நாட்களிலும் உளவுத்துறை தரும் தகவல்களை நேரடியாக பெறாமல் "ஆந்திரா ரெட்டி கேங் எனப்படும் பெட்டி கேங்கிடம்" அவற்றை வழங்கி வருவதாக கோட்டை வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது அது நிஜம்தானே CM sir ?
"மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" என்ற சினிமா பஞ்ச் டயலாக் போல் பாஜகவும் - ரெட்டிகேங்கும் இணைந்து நடத்தும் இந்த காட்டுத் தர்பார் ஆட்சிக்கு "டம்மியாக" ஒரு முதலமைச்சர் தேவையா CM Sir..






