தமிழ்நாடு

தேர்தல் ஆணையர் நியமன சட்டத்திற்கு ஆதரவளித்தது தவறு: ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம்!

தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான அமைப்பில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் இருக்கக் கூடாது.

தேர்தல் ஆணையர் நியமன சட்டத்திற்கு ஆதரவளித்தது தவறு: ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையர் நியமன சட்டத்திற்குத் தங்களது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது தவறானது என்றும், அதற்காகத் தற்போது வருந்துவதாகவும் அக்கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழுவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அப்போது இந்த மசோதாவிற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவாக வாக்களித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, "தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான அமைப்பில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் இருக்கக் கூடாது. தற்போதைய நடைமுறை தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பையே ஒருதலைப்பட்சமாக மாற்றியுள்ளது. தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் மீண்டும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சேர்க்கும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய விவகாரங்களில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவளித்து வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, தற்போது தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஒன்றிய அரசை உத்தியோகபூர்வமாகக் கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories