
இந்தியாவில் C-390 Mi11ennium ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை (எப்.ஏ.எல்.) அமைக்க நாக்பூரை மகிந்திரா குழுமமும், பிரேசிலைச் சேர்ந்த Embraer நிறுவனமும் தேர்வு செய்துள்ளன.
இதையடுத்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசு தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்திய விமானப்படைக்காக (-390 விமானங்களை தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் கிடைத்தால், நாக்பூரில் விமானங்களைஒன்றிணைத்தல், பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்தல், உற்பத்திப் பொறியியல் மற்றும் உள்நாட்டு உதிரிபாக விநியோகச் சங்கிலியை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன.
C-390 விமானத்தை இந்திய விமானப்படை தேர்வு செய்தால், சுமார் 60 விமானங்களை வாங்கும் திட்டம் உள்ளது. பழைய An-32 மற்றும் சில 11-76 விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால், இது மிகப்பெரிய ராணுவ விமான ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நாக்பூரைத் தேர்வு செய்ததற்கான காரணங்களை Embraer அல்லது மகிந்திரா நிறுவனம் விரிவாக வெளியிடவில்லை. ஆனால், மகாராஷ்டிர அரசு நிலத்தை விரைவாக ஒதுக்கி, திட்டத்துக்கு தேவையான உதவிகளை செய்ததாக மகிந்- திரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுதான் தற்போது தமிழகத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தின் விமானம் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி கட்டமைப்பின் முக்கிய பகுதிகளான சூலூர் மற்றும் ஒசூர் ஆகிய இடங்கள் Embraer நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
சூலூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே விமானம் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களும், திறமையான பொறியாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. எனவே, இத்திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு இருந்ததாக தி.மு.க. தரப்பு கூறுகிறது.
முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, த.வெ.க. ஆட்சியில் விமான உற்பத்தி, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மிகப்பெரிய உதிரிபாக உற்பத்தி சங்கிலியை உருவாக்கக்கூடிய திட்டம் தமிழகத்தை விட்டு சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
‘இது சாதாரண தொழிற்சாலை அல்ல. இந்தியாவுக்கு எதிர்காலத்தில் 60 முதல் 80 C-390 விமானங்கள் தேவைப்படலாம். மகாராஷ்டிர அரசு நிலத்தை விரைவாக ஒதுக்கியதாக மகிந்திரா நிறுவனம் பாராட்டியுள்ளது. அப்படியிருக்க தமிழகத்தில் என்ன நடந்தது?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திடம் விமான உற்பத்திக்கான கட்டமைப்பு, பொறியியல் திறமை மற்றும் உற்பத்தித் திறன் இருந்தும், முதலீட்டுத் திட்டங்களை தொடர்ந்து பின்தொடர்ந்து கொண்டு வருவதற்கு தீவிர முயற்சி தேவை என்றும் ராஜா தெரிவித்- தார்.
சுமார் ரூ.6,000 கோடி முதலீடும், 1,000 வேலைவாய்ப்புகளும் உருவாகக்கூடிய திட்டம் இது என்றும், ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 66 விமானங்களுக்கான விமானப்படை ஒப்பந்தத்துடன் இந்த திட்டம் தொடர் புடையது என்றும், ‘சூலூர், ஓசூர் ஆகிய இடங்கள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் தேவையான விமானத் துறை கட்டமைப்பும் இருந்தது.
ஆனால், திட்டத்தைஇறுதி முடிவு வரை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லும் அரசு தமிழ்நாட்- டில் இல்லை. மகாராஷ்டிரா நிலத்தை ஒதுக்கி திட்டத்தை தன் பக்கம் கொண்டு சென்றுவிட்டது' என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தத் திட்டம் தமிழகத்துக்கு வந்திருந்தால் விமான உற்பத்தியுடன் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும், அதனைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் தமிழகத்தில் உருவாகியிருக்கும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, Embraer நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் பிராந்திய பயணிகள் விமானங்கள் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளவும் தயாராகி வருவதாக கூறப்படு- கிறது. இதனால், விமானத் துறை சார்ந்த அடுத்தகட்ட முதலீடுகளை தமிழகம் எவ்வாறு ஈர்க்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.






