
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கே அடிப்படையான இரண்டு தீவிரமான விவகாரங்களைத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவருவதோடு, காவல்படைத் தலைவர் என்ற முறையில் தாங்கள் நேரடியாகத் தலையிட்டு உடனடி , மேற்கொள்ள வேண்டுமெனக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன்.
=> மாவட்ட ஆட்சியர் ஒருவருக்குப் பாலியல் கொல்லை அளிக்கப்பட்ட விவரம் :
1. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு ஆபாசமான, முறையற்ற மற்றும் பாலியல் ரீதியாக வெளிப்படையான வாட்ஸ்அப் (WhatsApp) குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்கு அனுமதியின்றிச் சென்றதாகவும் 10:11.2026 முதல் ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இச்செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இவ்விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் WP (Crl) No. 3183/2026 என்ற நீதிப்பேராணை மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
2. மாண்பமை உயர்நீதிமன்றத்தில், மாநில அரசின் குற்றவியல் வழக்கறிஞர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரிடமிருந்து எவ்விதப் புகாரோ அல்லது முறையீடோ பெறப்படவில்லை என மாநில அரசு தெரிவித்தது. எனினும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின் வாயிலாக, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் முறைகேடான நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை 31.07.2026 அன்றே மாவட்ட ஆட்சியர் மூத்த அரசு அதிகாரிகளின் கவணத்திற்குக் கொண்டுசென்றதும் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்ததும் தெரியவந்துள்ளது.
3. 23.11.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

4. குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆளுங்கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் என்பதோடு, புகார்தாரர் பணியாற்றும் அதே மாவட்டத்தில் கணிசமான அரசியல் செல்வாக்கு கொண்டவராகவும் உள்ளார். எனவே. புகார்தாரரையும் சாட்சிகளையும் அவர் அச்சுறுத்துவதற்கும், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள், அவற்றை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட மின்னணுச் சாதனம், மாவட்ட ஆட்சியரின் இல்லத்திலுள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கும் அல்லது அவற்றில் முறைகேடாக மாற்றங்கள் செய்யப்படுவதற்கும் ஆபத்து நிலவுகிறது.
உண்மையான இக்குற்றச்சாட்டுகள் பிடியாணையின்றிக் கைது செய்யத்தக்க குற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சூழலில் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் ஒரு சாதாரணக் குடிமகன் எவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட செய்யப்படுவாரோ, அவ்வாறே சட்டமன்ற உறுப்பினரும் மேலும் காலதாமதமின்றிக் கைது செய்யப்பட வேண்டும்.
5. மேலும், விசாரணையானது மாநிலச் சட்டத்துடன் மட்டும் சுருக்கப்பட்டுவிடக் கூடாது. பாலியல் தொல்லை, பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கிலான சொற்கள் அல்லது சைகைகள், குற்றவியல் மிரட்டல், அத்துமீறி இல்லத்திற்குள் நுழைதல், மின்னணு வடிவில் ஆபாசத் தகவல்களை அனுப்புதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, பாரதிய நியாய சன்ஹிதா, 2023 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ஆகியவற்றின் உரிய சட்டப்பிரிவுகளின்கீழும் ஆய்வு மேற்கொண்டு, விசாரணையின் அடிப்படையில் பொருத்தமான குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும்.

=> 31.07.2026 முதல் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்காதது :
6. மாவட்ட ஆட்சியரின் புகார் 31.07.2026 முதலே தலைமைச் செயலாளரிடம் இருந்துள்ளது. ஏறத்தாழ நான்கு மாதங்களாக அப்புகாரைப் பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்வு) சட்டம், 2013-இன்கீழ் அமைக்கப்பட்டுள்ள உள்ளகப் புகார் குழுவிற்குத் தலைமைச் செயலாளர் அனுப்பிவைக்கவில்லை: செய்வதற்காகத் தங்களது வழக்குப் பதிவு அலுவலகத்திற்கும் அனுப்பிவைக்கவில்லை. பணியிடப் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தின் (POSH Act) 19-ஆவது பிரிவின்படி, மூன்றாம் நபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண் அதிகாரி குற்றவியல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு உதவ வேண்டிய சட்டப்பூர்வக் கடமை மணியளிப்பவருக்கு உள்ளது. இதைவிட மோசமாக, எவ்விதப் புகாரும் பெறப்படவில்லை என மாண்பமை உயர்நீதிமன்றத்தில் மாநில தெரிவித்த நிலைப்பாடு. ஆவணங்களில் உள்ள உண்மை நிலைக்கு முரணானதாக அமைந்துள்ளது.
7. இவ்வாறு தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்ததன் மூலம், பெண் அதிகாரி ஒருவருக்குச் சட்டம் வழங்கும் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாமல் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்; 23.11.2026 அன்று அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அமைந்த நீதிமன்றத்தின் முன்பு தவறாக வழிநடத்தும் தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, புகாரைத் தடுத்து வைத்திருந்த தலைமைச் செயலாளரின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்தவும், விசாரணையின் ஒரு பகுதியாக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும், இவ்வாறு புகாரை மறைத்தது சட்டத்தின்கீழ் ஏதேனும் குற்றமாக அமைகிறதா என்பதை ஆராயவும் கேட்டுக்க கொள்கிறேன். மேலும், விசாரணையின் முடிவுகளை அனைத்திந்தியப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-இன்கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாண்புமிகு ஆளுநர், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகிய தகுதிவாய்ந்த அதிகார அமைப்புகளுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்க கொள்கிறேன்.
8. தலைமைச் செயலாளரின் இந்தச் செயலின்மை, பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்வு) சட்டம், 2013-இன் 26-ஆவது பிரிவின் வரம்பிற்குள்ளும் வருகிறது. அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள பொது ஊழியர் என்ற முறையில், 31.07.2026 அன்று புகாரைப் பெற்ற பின்னரும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் நோக்கில், சட்டப்படி தகுதிவாய்ந்த காவல்துறை அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதன் மூலம், பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) 255-ஆவது பிரிவின் விதிமுறைகளையும் அவர் மீறியுள்ளார்.
9. மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியைப் பணியிட மாற்றம் பெற்றுச் செல்லுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதாகவும், அதனை ஏற்க மறுத்த அந்த அதிகாரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்ததாகவும் மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது ஃபேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பொதுவெளியில் தெரியவந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட அதிகாரியையே பணியிட மாற்றம் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்துவது, மாநிலத்தில் எந்த அளவிற்குச் சட்டம் மீறப்படுகிறது என்பதையும், குற்றஞ்சாட்டப்பட்ட ஆளுங்கட்சியினர் எவ்வாறு அரசால் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதையும் காட்டுகிறது. அந்தச் சமூக வலைத்தளப் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே அப்பதிவு நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

=> மாண்புமிகு அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தது :
10. 12.11.2026 அன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாண்புமிகு சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார், இவ்விவகாரத்தைத் தாம் விவாதிக்க விரும்பாத ‘தனிப்பட்ட விவகாரம்’ எனக் குறிப்பிட்டதோடு, சமூக ஊடகத் தகவல்களின் அடிப்படையில் இப்பிரச்சினையை எழுப்புகின்றனர் எனவும் விமர்சித்தார். மாவட்ட ஆட்சியரின் எழுத்துப்பூர்வமான புகார் ஜூலை 2026 முதலே தலைமைச் செயலாளரிடம் நிலுவையில் இருந்த சூழலில், அமைச்சர் இத்தகைய கருத்தைத் தெரிவித்ததோடு, அந்த உண்மையையும் பொதுமக்களிடம் வெளிப்படுத்தவில்லை.
11. மாநிலத்தின் சட்ட அமைச்சரே இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது, பணியில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் பாலியல் தொல்லைப் புகாரின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், உண்மை நிலை குறித்து பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும், இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்குத் தெளிவான ஒரு சமிக்ஞையை அனுப்புவதாகவும் அமைந்துள்ளது. எனவே, இத்தகைய அரசியல் கருத்துகளின் தாக்கத்திலிருந்து விசாரணை முற்றிலும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும், இக்கருத்தைத் தெரிவித்தபோது மாவட்ட ஆட்சியரின் புகார் குறித்து அமைச்சர் அறிந்திருந்தாரா என்பதை விசாரிக்கவும், உண்மை விவரங்களை விசாரணைப் பதிவில் இடம்பெறச் செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.
= > துறையூர் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் :
12. 08.11.2026 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூரில், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுவுடன் மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவரும் துறையூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம். ரவிசங்கரை அணுகிய திரு. கார்த்திக் குமார், தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டு, காலால் உதைக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தின் காணொலி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது காணொலியில், சட்டப்பேரவைத் துணைத் தலைவருக்கு அருகில் அமர்ந்திருந்த திரு. கார்த்திக் குமார், தாம் தாக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். பின்னர் வெளியான மூன்றாவது காணொலியில், சட்டப்பேரவைத் துணைத் தலைவரும் சமயபுரம் காவல் ஆய்வாளரும் தமக்குக் கொலை மிரட்டல் விடுத்து, முந்தைய குற்றச்சாட்டை மறுத்துக் காணொலி பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், தமது இருசக்கர வாகனத்தின் சாவி, தங்கச் சங்கிலி மற்றும் மூக்குக் கண்ணாடி ஆகியவை தம்மிடமிருந்து பறிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சிகிச்சைக்காக அவர் திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அனுமதிக்கப்பட்டார்.
13. நினைவு அரசு மருத்துவமனையில் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல், சட்டவிரோதமாகப் பொருட்களைப் பறித்தல் உள்ளிட்ட பிடியாணையின்றிக் கைது செய்யத்தக்க குற்றங்களையும், காவல்துறை அதிகாரி ஒருவரால் பாதிக்கப்பட்ட நபர் கட்டாயப்படுத்தப்பட்டதையும் இக்குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
சம்பந்தப்பட்ட உள்ளூர்க் காவல் நிலையத்தின் அதிகாரியே இவ்விவகாரத்தில் தொடர்புடையவராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால், உள்ளூர்க் காவல்துறையினர் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.
எனவே, சட்டப்பேரவைத் துணைத் தலைவர், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் (ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், உரிய அனைத்துக் குற்றப்பிரிவுகளையும் சேர்த்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரது பெயர்களையும் அதில் இடம்பெறச் செய்யவும்), விசாரணையைச் சிபிசிஐடி (CB-CID) போன்ற சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்றவும், திரு. கார்த்திக் குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

=> மேற்கண்டவற்றின் அடிப்படையில், பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன் :
14. சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷைத் தாமதமின்றிக் கைது செய்து, அவரது கைப்பேசி மற்றும் மின்னணு ஆதாரங்களைக் கைப்பற்றித் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லத்திலுள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும்.
15. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ஆகியவற்றின்கீழ் பொருத்தமான அனைத்துக் குற்றப்பிரிவுகளையும் சேர்த்து, இவ்வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கு (CBI) மாற்ற வேண்டும்.
16. பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்குப் போதிய பாதுகாப்பு வழங்குவதோடு, இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் அவருக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
17. 31.07.2026 முதல் மாவட்ட ஆட்சியரின் புகார் மீது தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்து விசாரணை நடத்தி, அதன் முடிவுகளை உரிய நடவடிக்கைக்காகத் தகுதிவாய்ந்த அதிகார அமைப்புகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
18. மாண்புமிகு அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அல்லது அதிகாரப் பொறுப்பில் உள்ள வேறு எவரது பொதுவெளிக் கருத்துகளாலும் விசாரணை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
19. துறையூர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர், சமயபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் த தொடர்புடைய பிற நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையைச் சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட நபருக்குப் பாதுகாப்பும் வழங்க வேண்டும். இவ்விவகாரங்களின் தீவிரத்தன்மை கருதி, உரிய அவசரத்துடனும் சுதந்திரமாகவும் தாங்கள் செயல்படுவீர்கள் என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வகிக்கும் அரசியல் பதவிகளைப் பபொருட்படுத்தாமல் அனைவருக்கும் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்படும் என்றும் நம்புகிறேன்.






