
சென்னை திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்
இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அதே பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அந்த 3 பேரையும் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்நிலையில்,குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் "சென்னை திருவொற்றியூர் அருகே வடமாநில தம்பதியின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 5 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும், பொறுப்பற்ற தவெக ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை எண்ணியும் மனம் வருந்துகிறது.
வீண் விளம்பரத்திற்காக ஒரு சினிமாத்தனமான சிறப்புப் படையை உருவாக்கியதைத் தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவருக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.






