தமிழ்நாடு

பத்திரிகையாளர்களை அவமதித்த வைகோ... “என்ன வெங்காயத்திற்கு அழைக்கின்றீர்கள்?” - மல்லை சத்யா காட்டம்!

பத்திரிகையாளர்களை அவமதித்த வைகோ... “என்ன வெங்காயத்திற்கு அழைக்கின்றீர்கள்?” - மல்லை சத்யா காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தவெகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார். கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், வைகோவுக்கு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை பலர் மத்தியில் அவமானப்படுத்தினார்.

விஜயிடம் குதிரை பேரம் நடந்ததாக வைகோவே பேட்டியில் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதுகுறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களையும் அவதூறாக பேசினார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் வைகோ ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்கி பேசி வருகிறார்.

அந்த வகையில் இன்று கோவையில் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று (நவ.20) நடைபெற்ற மறைந்த தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் இறுதி ஊரவலத்தின்போது, முதல்வர் விஜய் அருகே சென்ற வைகோவை, அமைச்சர் தமிழன் பார்த்திபன் தடுத்து நிறுத்தினார். அதற்கு வைகோ அவரை கை நீட்டி சாடிய வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பத்திரிகையாளர்களை அவமதித்த வைகோ... “என்ன வெங்காயத்திற்கு அழைக்கின்றீர்கள்?” - மல்லை சத்யா காட்டம்!

அதற்கு முறையாக பதிலளிக்க முடியாத வைகோ, "அவர் யாரென்றே தெரியாது... அவர் அமைச்சர் என்று கூட தெரியாது..." என்று பதிலளித்தார். இதற்கு எதிர் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை, வழக்கமான முறையில் ஒருமையில் பேசியும், 'யோவ் நிறுத்தியா... நீ என்ன பத்திரிகை?' என்று கேள்வி எழுப்பியும் தனது அராஜக போக்கை கையாண்டார்.

மேலும் பதிலளிக்க முடியாத வைகோ, வழக்கமான உத்தியான "நீ திமுகவின் ஏஜென்ட்" எனவும் பத்திரிகையாளர்களை வசைபாடி எதிர்கேள்விகளை கேட்க விடாமல் அதட்டி, மிரட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலர் மத்தியிலும் கண்டங்களை எழுப்பி வருகிறது.

பத்திரிகையாளர்களை அவமதித்த வைகோ... “என்ன வெங்காயத்திற்கு அழைக்கின்றீர்கள்?” - மல்லை சத்யா காட்டம்!

அந்த வகையில் திராவிடர் வெற்றிக் கழக நிறுவனர் மல்லை சத்யா தனது கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

மதிப்புமிகு அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தொடர்ச்சியாக ஊடகத்தை பார்த்து ஒருமையில் பேசுவதும் நீ எந்த பத்திரிகை? என்று கேட்டு மிரட்டுவதும் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ஆதிக்க வர்க்க மனநிலையை காட்டுகிறது, நீ எந்த ஊடகம் என்று கேட்பதும் நீ எந்த ஜாதி என்று கேட்பதும் வேறல்ல , இப்படி பேசிவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பது தொடர்கதையாகி வருகிறது.

நான் மட்டும் தான் பேசுவேன், நீ கேள்விக் கேட்கக் கூடாது என்று ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்வது பிணத்தை தழுவுவதற்கு சமம். பதில் சொல்ல முடியாதற்கு என்ன வெங்காயத்திற்கு ஊடகத்தை அழைக்கின்றீர்கள்?நான் மட்டுமே பேசுவேன் என்பதை அறிக்கையாக எழுதி அனுப்பி விடலாமே.

பத்திரிகையாளர்களை அவமதித்த வைகோ... “என்ன வெங்காயத்திற்கு அழைக்கின்றீர்கள்?” - மல்லை சத்யா காட்டம்!

இது போன்ற சூழல்களில் ஒன்று ஊடகத் துறையினர் சம்பந்தப்பட்ட கட்சி தலைவரின் நேர்காணலைத் (பேட்டியை) தவிர்க்க வேண்டும்.அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு முகக்கவசம் அணிந்து சென்று எந்த கேள்வியும் கேட்காமல் அவர் சொல்வதை பதிவு செய்து விட்டு வரலாம்.

உயர் பாதுகாப்பில் இருக்கும் முதலமைச்சரின் பாதுகாப்பு முறைகள் கடுமையாகத் தான் இருக்கும் பாதுகாப்பு வளையத்தில் அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்பதை திமுக தயவால் 29 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் குப்பை கொட்டியவருக்கு தெரியவில்லை.

தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் பார்த்திபன் அவர்களை யார் என்று தனக்கு தெரியாது என்று உலக அரசியல் ஞானம் கொண்ட கூட்டணி கட்சித் தலைவர் சொல்வது வெட்கக்கேடு. சாதாரணமானவர்கள் முதலமைச்சர் பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளே வரமுடியுமா என்பது கூட தெரியாமல் இருப்பது அரசியல் கட்சி தலைவருக்கு அழகல்ல எனவேதான் இவரிடமும் இவரின் மகனிடமும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும் தவெக வினரும் எச்சரிக்கையாக இருக்க சொல்லி வருகின்றேன்.

பத்திரிகையாளர்களை அவமதித்த வைகோ... “என்ன வெங்காயத்திற்கு அழைக்கின்றீர்கள்?” - மல்லை சத்யா காட்டம்!

அஇஅதிமுக பொதுச்செயலாளர் நினைவில் வாழும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பொதுநல ஊழியராக இருந்த போது தன் வளர்ப்பு மகன் திருமணத்தை விமர்சையாக நடத்தினார். அதனால் ஊழல் ராணி ஜெயலலிதா என்று எழுதக் கூசும் வார்த்தைகளால் விமர்சனம் செய்து கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை 52 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டது,சாட்சாத் வைகோ அவர்கள்தான் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்.

அவர் வீட்டுத் திருமணங்கள் சென்னையில் நடைபெற்று இந்திய தலைநகர் டில்லியில் கனடா நாட்டில் அமெரிக்காவில் வரவேற்பு விழா நடத்தியதை மறந்து விட்டு ஒரு கவுன்சிலர் கூட ஆகாத கலாநிதி மாறன் அவர்களின் மகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கைத் துணை லதா அவர்களின் சகோதரர் ரவி ராகவேந்திரா மகன் இசை அமைப்பாளார் அனிருத் அவர்களுக்கும் கிரிஸ் நாட்டில் நடைபெற்ற திருமணத்தை ஏன் வைகே விமர்சனம் செய்கிறார்.

இந்த திருமணத்திற்கு அரசு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசு பணத்தை செலவு செய்தார்கள் என்றால் கேள்வி எழலாம். எங்கே இவருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகின்றது மணமகளின் உறவினர் என்ற முறையில் திமுக தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் திருமணத்தில் பங்கேற்றதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகின்றார், என்பதே இதில் உள்ள அரசியல்.

banner

Related Stories

Related Stories