தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த +1 மாணவி.. வீடு புகுந்து கொலை செய்த இளைஞர்.. தானும் விஷம் குடித்த அவலம் - பின்னணி?

வீட்டில் தனியாக இருந்த +1 மாணவியை இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த +1 மாணவி.. வீடு புகுந்து கொலை செய்த இளைஞர்.. தானும் விஷம் குடித்த அவலம் - பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரம் சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன் மகன் முத்துராஜா. இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவியும், முத்துராஜாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், மாணவியின் படிப்பு முடிந்த பிறகு திருமணம் தொடர்பாக பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மாணவி வேறொரு நபருடன் செல்போனில் பேசுவதாக சந்தேகமடைந்த முத்துராஜா, அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த +1 மாணவி.. வீடு புகுந்து கொலை செய்த இளைஞர்.. தானும் விஷம் குடித்த அவலம் - பின்னணி?

இந்நிலையில், இன்று (நவ.21) பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முத்துராஜா, மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முத்துராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, முத்துராஜா தான் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதில் முத்துராஜா மாணவியின் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த +1 மாணவி.. வீடு புகுந்து கொலை செய்த இளைஞர்.. தானும் விஷம் குடித்த அவலம் - பின்னணி?

இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் உடல் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது .

தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட குற்றவாளி முத்துராஜாவை கைது செய்த சாயர்புரம் காவல்துறையினர் இரண்டு காவலர்கள் பாதுகாப்புடன் தொடர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதுடன் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக ஆட்சியில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவும் நிலையில், தூத்துக்குடியில் இந்த சம்பவம் அரங்கேறி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories