அரசியல்

“யோவ் நிறுத்தியா.. நீ என்ன பத்திரிகை?” - கேள்விக்கு பதில் சொல்ல திணறல்.. பத்திரிகையாளர்களை வசைபாடிய வைகோ!

கேள்விக்கு பதில் சொல்ல முடியாத வைகோ, பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“யோவ் நிறுத்தியா.. நீ என்ன பத்திரிகை?” - கேள்விக்கு பதில் சொல்ல திணறல்.. பத்திரிகையாளர்களை வசைபாடிய வைகோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் எம்.பி. வைகோ, தவெகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார். கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், வைகோவுக்கு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை பலர் மத்தியில் அவமானப்படுத்தினார்.

விஜயிடம் குதிரை பேரம் நடந்ததாக வைகோவே பேட்டியில் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதுகுறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களையும் அவதூறாக பேசினார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் வைகோ ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்கி பேசி வருகிறார்.

“யோவ் நிறுத்தியா.. நீ என்ன பத்திரிகை?” - கேள்விக்கு பதில் சொல்ல திணறல்.. பத்திரிகையாளர்களை வசைபாடிய வைகோ!

இதற்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தும், தனது போக்கை வைகோ மாற்றிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவரை நோக்கி கேள்வி எழுப்பினால், உடனே "திமுகவின் ஏஜென்ட்" என்று ஊடகத்தை நோக்கி தாக்கி பேசி வருகிறார்.

அந்த வகையில் இன்று கோவையில் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று (நவ.20) நடைபெற்ற மறைந்த தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் இறுதி ஊரவலத்தின்போது, முதல்வர் விஜய் அருகே சென்ற வைகோவை, அமைச்சர் தமிழன் பார்த்திபன் தடுத்து நிறுத்தினார். அதற்கு வைகோ அவரை கை நீட்டி சாடிய வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“யோவ் நிறுத்தியா.. நீ என்ன பத்திரிகை?” - கேள்விக்கு பதில் சொல்ல திணறல்.. பத்திரிகையாளர்களை வசைபாடிய வைகோ!

அதற்கு முறையாக பதிலளிக்க முடியாத வைகோ, "அவர் யாரென்றே தெரியாது... அவர் அமைச்சர் என்று கூட தெரியாது..." என்று பதிலளித்தார். இதற்கு எதிர் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை, வழக்கமான முறையில் ஒருமையில் பேசியும், 'யோவ் நிறுத்தியா... நீ என்ன பத்திரிகை?' என்று கேள்வி எழுப்பியும் தனது அராஜக போக்கை கையாண்டார்.

மேலும் பதிலளிக்க முடியாத வைகோ, வழக்கமான உத்தியான "நீ திமுகவின் ஏஜென்ட்" எனவும் பத்திரிகையாளர்களை வசைபாடி எதிர்கேள்விகளை கேட்க விடாமல் அதட்டி, மிரட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலர் மத்தியிலும் கண்டங்களை எழுப்பி வருகிறது. வைகோவின் இந்த செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories