தமிழ்நாடு

“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!

அனைத்து பேருந்துகளிலும் இலவசம் என சொன்ன த.வெ.க அரசு தற்போது பேருந்துகளில் மகளிரிடம் கட்டணம் வசூலிப்பது சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட'விடியல் பயணம்', 'மகளிர் உரிமைத் தொகை', 'நான் முதல்வன்' போன்ற திட்டங்களின் பெயர்களே அவற்றின் நோக்கத்தையும் வலிமையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன. ஆனால், த.வெ.க அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் முந்தைய அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதிலும், ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் விடியல் பயணம் திட்டத்தை பெயர் மாற்றி, டீலக்ஸ், LSS, Express ஆகிய பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என த.வெ.க அரசு அறிவித்தது. இதற்கான நடைமுறையும் இன்று தொடங்கியது.

ஆனால், எந்தெந்த பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணம் கிடையாது என்ற தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், பல பேருந்துகளில் மகளிரிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் கட்டணம் வசூலிப்பதால் நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே தொடர் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தடம் எண் 46 பேருந்தில், ஐ.சி.எப் (ICF) பகுதியிலிருந்து அண்ணா நகருக்குத் தனது மகளுடன் பயணித்த பெண் ஒருவரிடம், அவரது மகளுக்கு 13 ரூபாய் முழு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயணச்சீட்டு ஆதாரத்துடன் அப்பயணி தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை முழுமையாகவும், குழப்பமின்றியும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் செயல்படுத்தாமல், வெறும் பெயர் மாற்ற அரசியல் செய்வதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவதாகப் பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

banner

Related Stories

Related Stories