தமிழ்நாடு

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?

இந்தியில் ஊர் பெயர்கள் இருந்தது பெரும் சர்ச்சையான நிலையில், தவெக அரசுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதனை உடனே மாற்றியுள்ளது.

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஒரு மினி பாஜகவை போலவே செயல்படுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல் அவரது நடவடிக்கையும் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தாத தவெக, பாஜக பாணியான பிற கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குவதிலேயே குறியாக இருந்து வருகிறது.

அதோடு மோடி ஆட்சியின் அவலங்கள் குறித்து விமர்சித்தால், எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ் என கூறும் மோடியை போலவே, தற்போது விஜய் ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால், திமுக திமுக என்றே கதறி வருகின்றனர் விஜய் மற்றும் அவரது கட்சியினர். எல்லாவற்றுக்கும் பாஜக பாணியை பின்பற்றும் விஜய் கட்சி, அண்மையில் கூட பல்வேறு துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதில் முனைப்பு காட்டியது.

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் இந்தியை மெதுவாக ஊடுருவ வைக்கவும் முனைப்பு காட்டி வருவது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியுள்ளது.

அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில், இதுவரை அரசு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்து விவகாரங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இப்படியான சூழலில் ஊர்களின் பெயர்கள் இந்தியிலும் இடம்பெற்றுள்ளது, அதுவும் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது தவெக அரசுக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்தது.

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?

அந்த வகையில் இந்த விவகாரத்துக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டன பதிவில், "இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?

வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?

இந்த நிலையில், தற்போது அந்த பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகள் வழக்கம்போல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளது தவெக அரசு. தவெக ஆட்சியில் பல மாற்றங்களை கொண்டு வருவதாக எண்ணி, தமிழ்நாடு கேடு தரும் திட்டங்களை தொடர்ந்து அறிவித்தும், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பும்போது அதனை திரும்பப்பெறுவதையுமே வழக்கமாக வைத்துள்ளது. அந்த பட்டியலில் தற்போது இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories